நீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்?

Dhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ?

டெல்லி: மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் கோலி சேர்க்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. தோனியின் ஓய்வு திட்டங்களை தொடர்ந்து கோலி சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் தொடர் விளையாட செல்கிறது. ஒரு மாதம் முழுக்க மிக நீண்ட தொடராக இந்த தொடர் நடக்க உள்ளது.

மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் இந்த தொடரில் நடக்க உள்ளது. ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடக்க உள்ளது.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி, சேவாக்! கனவு வேணா காணலாம்.. அப்ளிகேஷன் கூட போட முடியாது!

கடைசி போட்டி

கடைசி போட்டி

ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் நடக்க போகும் கடைசி தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துணை பயிற்சியாளர்களுக்கு இதுதான் கடைசி போட்டி. இந்த போட்டிக்கு பின் இந்திய அணியின் தேர்வு வாரியமும் மொத்தமாக மாற்றப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலி இருக்கிறார்

கோலி இருக்கிறார்

முதலில் இந்த தொடரில் கோலி, பும்ரா கலந்து கொள்ள மாட்டார்கள் என்று செய்திகள் வந்தது. ஆனால் கோலியும் இந்த முறை மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இந்திய அணி சார்பாக அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கு பின் பல காரணம் இருக்கலாம் என்கிறார்கள்.

தோனி கடைசி

தோனி கடைசி

இந்த தொடரில் தோனி கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால்தான் கோலியையும் இப்போது அணியில் எடுக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதாவது தோனிக்கு இதுதான் கடைசி கிரிக்கெட் தொடர். அதனால்தான் ஓய்வு அளிக்கப்பட்ட கோலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏன் மீண்டும்

ஏன் மீண்டும்

தோனியின் கடைசி போட்டியில் கோலி விளையாட வேண்டும் என்பதால் அவரை மீண்டும் அழைத்து இருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவுகள் தொடரில் தோனிக்கு வழி அனுப்பு விழா நடக்கும். அப்போது கோலி இருக்க வேண்டும். அதனால்தான் கோலியை அணிக்குள் இப்போது மீண்டும் அவசர அவசரமாக எடுத்து இருக்கிறார்கள்.

யாரெல்லாம் ஓய்வு

யாரெல்லாம் ஓய்வு

இதுதான் கடைசி நேரத்தில் கோலியை அழைக்க காரணம் என்று யூகங்கள் தெரிவிக்கிறது. இந்த தொடரில் இந்திய பயிற்சியாளர்களும் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக பெரிய பிரிவு உபசார விழா நடக்கும் என்கிறார்கள். இதே தொடரில்தான் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கெயிலும் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Skipper Kohli inclusion in WI series raises questions on Dhoni retirement.
Story first published: Thursday, July 18, 2019, 13:34 [IST]
Other articles published on Jul 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X