For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு பிடிச்சது எல்லாமே வெளிநாடு.. ஆனா தேச பக்தி உள்ளது போல நடிக்கலாமா? #சர்ச்சை

Recommended Video

இந்திய ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்ன விராட் கோஹ்லி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருக்கிறார்.

ஆனால், தற்போது ஒரு தேவையற்ற சர்ச்சையில் தானாக வந்து சிக்கியுள்ளார். கோலியை பிடிக்காது. இந்த இந்தியரின் ஆட்டத்தை பார்ப்பதற்கு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை பார்க்கலாம் என கூறிய ரசிகரை, நாட்டை விட்டு வெளியே போகலாம் என கூறினார் கோலி. இந்தியாவில் இருந்து கொண்டு வேறு நாட்டு வீரர்களை பிடிக்கும் என்பது சரியானதல்ல என கோலி கூறி இருந்தார்.

இது சமூக வலைதளத்தில் கோலிக்கு எதிரான கருத்துக்கள் பரவ காரணமாக அமைந்துள்ளது. சிலர் கோலி தேசப்பற்று கொண்டவர் போல நடிக்கிறார் என சாடியுள்ளனர்.

இது ரொம்ப ஓவர்!! கோலியை பிடிக்காது என்ற ரசிகர்.. இந்தியாவை விட்டு வெளியே போ என்ற கோலிஇது ரொம்ப ஓவர்!! கோலியை பிடிக்காது என்ற ரசிகர்.. இந்தியாவை விட்டு வெளியே போ என்ற கோலி

வெளிநாட்டு பிராண்ட்களில் கோலி

கோலி பயன்படுத்தும் தொலைபேசி இந்தியாவில் தயாரானதா? அவர் ஆடி கார், புமா மற்றும் டிஸ்ஸாட் உள்ளிட்ட வெளிநாட்டு பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்யவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் இந்தப் பெண்.

வன்மத்தை தூண்டுகிறதா இந்த பேச்சு?

இந்தியாவில் இருக்கும் அனைவரையும் கண்ணை மூடிக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சமீப காலமாக "ஆன்டி-இந்தியன்", "பாகிஸ்தானுக்கு போ" போன்ற குரல்கள் வன்மத்தை தூண்டும் வகையில் எழுந்து வருவதை போலவே, கோலியின் இந்த பேச்சும் இருக்கிறது என மறைமுகமாக கூறுகிறார் இவர்.

எல்லாமே வெளிநாடு தான்

"வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டார். மற்ற விளையாட்டுகளில் வெளிநாட்டு வீரர்களை ஆதரிக்கிறார். இந்தியாவில் உருவான கபடியை விளையாடாமல், வெளிநாட்டில் உருவான ஒரு விளையாட்டை (கிரிக்கெட்) விளையாடுகிறார். பல சமயம் வெளிநாட்டு மொழியில் தான் பேசுகிறார். வெளிநாட்டு உடைகளை உடுத்துகிறார். அவர் பேசும் வார்த்தைகளை புரிந்து தான் பேசுகிறாரா?" என நச்சென்று கேட்டுள்ளார் இந்த நபர்.

கோலியின் அர்த்தமற்ற பேச்சு

கோலியின் அர்த்தமற்ற பேச்சு

கோலி உண்மையில் தான் பேசியதை சிந்தித்து பேசினாரா? அல்லது அவரை பிடிக்காது என அந்த நபர் கூறியதால் எரிச்சலாகி அப்படி சொன்னாரா? என்பது தெரியவில்லை. ஆனால், கோலியின் பேச்சு அர்த்தமற்றது என்பதை பெரும்பாலான மக்கள் சமூக வலைதளத்தில் கூறி வருகிறார்கள். கோலி களத்துக்கு வெளியே சாமர்த்தியம் அற்றவராக இருக்கிறார் என்ற எண்ணம் வளர அவரது செயல்பாடுகள் காரணமாக அமைந்து விடக் கூடாது.

Story first published: Thursday, November 8, 2018, 12:53 [IST]
Other articles published on Nov 8, 2018
English summary
Kohli like all foreign in his real life but showing fgake patriotism says Twitterati
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X