For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்கதான் வேண்டும்.. தொடர் வெற்றிக்கு பின் கறாராக சொன்ன கோலி.. மீட்டிங்கில் காரசார விவாதம்.. பின்னணி

டெல்லி: இங்கிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணியில் யாரை எல்லாம் எடுக்க வேண்டும் என்பதில் கேப்டன் கோலி மிகவும் கறாராக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக கோலிக்கு ஆதரவான வீரர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று புகார் உள்ளது. தோனிக்கு கீழ் இருந்த பல வீரர்கள் நீக்கப்பட்டு கோலி தனக்கென்று புதிய அணியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதிலும் கூட ரோஹித் சர்மாவிற்கு ஆதரவான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு கோலி வாய்ப்பு கொடுப்பது இல்லை என்று புகார் உள்ளது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இப்போது இந்திய அணியில் சிராஜ், சைனி, சாஹல், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற ஆர்சிபி வீரர்களும், மயங்க் அகர்வால், ராகுல் போன்ற முன்னாள் ஆர்சிபி வீரர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கோலியிடம் நட்பாக இருக்கும் பும்ரா, பாண்டியா போன்ற சில மும்பை வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது .

வாய்ப்பு

வாய்ப்பு

இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியில் கோலி ஆதிக்கம் செலுத்துகிறார் என்று புகார்கள் எழுந்தது . ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான இந்திய அணி தேர்வு கூட விமர்சனங்களை சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில் கோலி தேர்வு செய்த அணிதான், அதிலும் பெரும்பாலான ஆர்சிபி வீரர்கள்தான் தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு உதவி உள்ளனர்.

வெற்றி

வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல கோலி தேர்வு செய்த அணிதான் உதவியது. இந்த நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி தேர்விலும் கோலியின் முடிவே முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று மாலை இதற்காக மீட்டிங் நடந்தது. வெறும் 30 நிமிடம் மட்டுமே இந்த மீட்டிங் நடந்தது.

கோலி

கோலி

இந்த மீட்டிங்கில் நீண்ட நேரம் கோலி மட்டுமே பேசியுள்ளார். நான் சொல்லும் அணியை எடுங்கள். இந்த வீரர்கள்தான் அணியில் இருக்க வேண்டும் என்று நேற்று மீட்டிங்கில் கோலி கறாராக கூறியுள்ளார். கோலி தேர்வு செய்யும் வீரர்கள் நன்றாக ஆடுவதால் தேர்வுக்குழுவும் இவரின் பரிந்துரையில் மாற்றம் செய்யவில்லை.

வீரர்கள்

வீரர்கள்

கோலி பரிந்துரையின் அடிப்படையில் பிரித்வி ஷா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மயங்க் அகர்வால், ராகுல் போன்றவர்கள் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர். வாஷிங்க்டன் சுந்தரும் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளார்.

அணி தேர்வு

அணி தேர்வு

முழுக்க முழுக்க கோலியின் விருப்பத்தின் படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியானது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, January 20, 2021, 17:11 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Skipper Kohli played a huge role in picking up Team India for the Test series against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X