For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது பழைய டீம் இல்லை.. கோலி இனி எதுவும் பேச கூடாது.. தடை விதித்த பிசிசிஐ.. அதிரடி காரணம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ அமைப்பு புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்து இருக்கிறது.

Recommended Video

Captain Rohit : IND VS WI SERIES 2019 | கோலியும் ,ரோஹித்தும் விளையாடுவார்கள்: பிசிசிஐ திட்டம்-வீடியோ

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ அமைப்பு புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்து உள்ளது.

இந்திய அணி உலகக் கோப்பை செமி பைனலில் தோல்வி அடைந்த பின் வரிசையாக நிறைய மாற்றங்களை சந்திக்க இருக்கிறது. பயிற்சியாளர் தொடங்கி வீரர்கள் தேர்வுக்குழு வரை மொத்தமாக மாற்றப்பட இருக்கிறார்கள்.

முக்கியமாக முன்னணி வீரர்கள் சிலர் அணியில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து உள்ளனர். தோனி உள்ளிட்ட சில வீரர்கள் விரைவில் தங்கள் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது.

என்ன இப்போது

என்ன இப்போது

சென்ற முறை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட போது, அதில் கோலியின் தலையீடு அதிகமாக இருந்தது. கும்ப்ளே இந்திய அணியின் கோட்சாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கோலி பிசிசிஐ அமைப்பிடம் தொடர்ந்து முறையிட்டு கடைசியில் கோட்ச் மாற்றப்பட்டார்.

கோலி

கோலி

இதனால் கோலி தனக்கு தோதாக இருக்கும் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். இதனால் தோனியும், கோலியும் இணைந்து ரவி சாஸ்திரியை பரிந்துரை செய்தனர். கடைசியில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தன்படி முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் தலைமை பயிற்சியாளர் குறைந்தபட்சம் 2 வருடம் தேசிய அணிக்கு பயிற்சி அளித்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடி இருக்க வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கோலி

கோலி

இதனால் இந்த முறை கோலி இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்வதில் எந்த விதமான கருத்தும் கூற முடியாது. கோலி முன்பு போல பிசிசிஐ கூட்டங்களில் முக்கிய விஷயங்களை பேச முடியாது என்று கூறுகிறார்கள். இதனால் கோலிக்கு இருக்கும் பவர் குறைந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

கேப்டன்

கேப்டன்

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம். இதனால், இந்த முறை தலைமை பயிற்சியாளரை முழுக்க முழுக்க கபில் தேவ் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும். அதனால் கோலிக்கு தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதில் எந்த முக்கியத்துவமும் இருக்காது.

Story first published: Thursday, July 18, 2019, 9:56 [IST]
Other articles published on Jul 18, 2019
English summary
Kohli powerless in the coach selection process, Can't speak anything this time like last time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X