For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 ஓவர் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

By Mathi

மிர்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

வங்கதேசத்தின் மிர்பூரில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Kohli, Rohit help India crush Bangladesh

இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

Story first published: Saturday, March 29, 2014, 8:59 [IST]
Other articles published on Mar 29, 2014
English summary
A 100 run partnership between Virat Kohli and Rohit Sharma gave India a commanding eight wicket victory over Bangladesh at the Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X