For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நண்பேன்டா".. நங்கூரம் பாய்ச்சிய கோலி, ரோஹித் - அசைக்க முடியாத "உயரம்"

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்தியாவுக்கு எந்தவித ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், பாபர் அசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

 அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்? அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்?

அவர் 865 ரேட்டிங்குடன் முதலிடத்தில் நீடிக்க, அடுத்த இரண்டு இடங்களையும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

 ஆடாத அசையாத கோலி

ஆடாத அசையாத கோலி

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இரண்டாம் இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆடாமல், அசையாமல் அப்படியே உளளார். அவரது ரேட்டிங் 857. முதலிடத்தில் இருக்கும், பாபருக்கும் இவருக்குமான ரேட்டிங் வித்தியாசம் 8 மட்டுமே.

 நோ சேஞ்

நோ சேஞ்

மூன்றாம் இடத்தில், இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா நீடிக்கிறார். அவரது ரேட்டிங் 825. கடந்த 2019ம் ஆண்டு 885 புள்ளிகள் வரை முன்னேறிய ரோஹித், ரேட்டிங்கில் சரிந்து இப்போது 825ல் இருக்கிறார். எனினும், தனது மூன்றாவது இடத்தை இழக்காமல் நீடிக்கிறார்.

 சிஎஸ்கே மன்னன்

சிஎஸ்கே மன்னன்

நான்காம் இடத்தில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் உள்ளார். அவரது ரேட்டிங் 801. ஐந்தாம் இடத்தில், ஆஸ்திரேலிய லிமிட்டார் ஓவர்ஸ் கிரிக்கெட் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இருக்கிறார். ரேட்டிங் 791. ஆறாவது இடத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஏழாவது இடத்தில் பாகிஸ்தானின் அதிரடி ஓப்பனர் ஃபக்கர் சமான் உள்ளனர். தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸும் அதே புள்ளிகள் பெற்றதால் அவரும் 7வது இடத்தில் இருக்கிறார்

 ஷாய் ஹாப்

ஷாய் ஹாப்

அதேபோல், டேவிட் வார்னரும் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும் ஒரே ரேட்டிங் பெற்றிருப்பதால் 8வது இடம் காலியாக, இருவரும் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை, நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் முதலிடத்தில் இருக்கிறார். வங்கதேச சுழற் பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல், மற்றொரு வங்கதேச பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். இந்தியா தரப்பில், ஐஸ்பிரித் பும்ரா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, May 26, 2021, 21:16 [IST]
Other articles published on May 26, 2021
English summary
Kohli, Rohit in ICC ODI batting ranking - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X