For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே.. நாங்களும் கேட்கவில்லை.. கபில் தேவ் போட்டு உடைத்த சீக்ரெட்!

இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

கோலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை... கபில் தேவ் சொன்ன சீக்ரெட்

லண்டன்: இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் கேப்டன் விராட் கோலிக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் மேலும் இரண்டு வருடங்களுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க உள்ளார்.

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளனர்.

அப்போது எப்படி

அப்போது எப்படி

சென்ற முறை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட போது, அதில் கோலியின் தலையீடு அதிகமாக இருந்தது. கும்ப்ளே இந்திய அணியின் கோட்சாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கோலி பிசிசிஐ அமைப்பிடம் தொடர்ந்து முறையிட்டு கடைசியில் கோட்ச் மாற்றப்பட்டார்.

எப்படி தேவை

எப்படி தேவை

இதனால் கோலி தனக்கு தோதாக இருக்கும் நபரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். இதனால் தோனியும், கோலியும் இணைந்து ரவி சாஸ்திரியை பரிந்துரை செய்தனர். கடைசியில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

மீண்டும் கேட்டார்

மீண்டும் கேட்டார்

இதையடுத்து கோலி, மீண்டும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று கடந்த மாதம் கூறினார். ரவி சாஸ்திரிக்கும் அணிக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறது. அதனால் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வந்தால் அணிக்கு நல்ல வசதியாக இருக்கும் என்றார்.

மாற்றம் என்ன

மாற்றம் என்ன

ஆனால் இந்த முறை பயிற்சியாளர் தேர்வில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்தனர்.

இல்லவே இல்லை

இல்லவே இல்லை

அதேபோல் இந்த முறை தேர்வு முறையும் மிகவும் கண்டிப்பாக வைக்கப்பட்டு இருந்தது. பயிற்சியாளராக ஆக போகும் நபர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடி இருக்க வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவை தாண்டி, பயிற்சியாளர் தேர்வில் வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.

கோலி எப்படி

கோலி எப்படி

இதனால் இந்த முறை கோலி இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்வதில் எந்த விதமான கருத்தும் கூற முடியவில்லை. கோலி முன்பு போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வில் எதுவுமே பேசவில்லை.முழுக்க முழுக்க தேர்வு கமிட்டி மட்டுமே பயிற்சியாளரை தேர்வு செய்துள்ளது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இது தொடர்பாக பேட்டி அளித்த கபில், நாங்கள் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. கோலியிடமும் ஆலோசனை செய்யவில்லை. வேறு எந்த வீரரிடமும் ஆலோசனை செய்யவில்லை. நாங்கள் இன்டர்வியூ நடத்தினோம். ரவி சாஸ்திரி தேர்வாகி உள்ளார், அவ்வளவுதான். கோலி எதுவும் எங்களிடம் பேசவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, August 16, 2019, 19:19 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Virat Kohli was powerless in the coach selection process says Kapil Dev.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X