பழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா? பிசிசிஐ பிளான்

Captain Rohit : IND VS WI SERIES 2019 | கோலியும் ,ரோஹித்தும் விளையாடுவார்கள்: பிசிசிஐ திட்டம்-வீடியோ

டெல்லி: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கோலி விளையாட இருக்கிறார். இவர் பெரும்பாலும் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகி வருகிறது. இந்தியா தனது அடுத்த கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ள உள்ளது.

அதன்படி அடுத்த மாதம் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் தொடர் விளையாட செல்கிறது. ஒரு மாதம் முழுக்க மிக நீண்ட தொடராக இந்த தொடர் நடக்க உள்ளது.

ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்.. அவருக்கு தான் "தகுதி" இருக்கு!

என்ன தொடர்

என்ன தொடர்

மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் இந்த தொடரில் நடக்க உள்ளது. ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடக்க உள்ளது. ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் நடக்க போகும் கடைசி தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தகவல்

என்ன தகவல்

முதலில் இந்த தொடரில் கோலி, பும்ரா கலந்து கொள்ள மாட்டார்கள் என்று செய்திகள் வந்தது. ரோஹித் சர்மா தலைமையில்தான் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும். ரஹானே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார். கோலி, பும்ரா இருவரும் ஓய்வு எடுப்பார்கள் என்று கூறப்பட்டது.

இல்லை

இல்லை

ஆனால் கோலியும் இந்த முறை மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இந்திய அணி சார்பாக அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் அவர் ஒருநாள் அணிக்கு கேப்டனாக கோலி இருப்பாரா என்ற தகவல் வரவில்லை. டெஸ்ட் அணிக்கு மட்டும் அவர் கேப்டனாக இருப்பார் என்கிறார்கள்.

இப்போதே பழக்கம்

இப்போதே பழக்கம்

ரோஹித் சர்மா தலைமையில் கோலியை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்காகத்தான் பிசிசிஐ இப்போதே அவரை பழக்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் ரவி சாஸ்திரியின் கடைசி தொடர் என்பதாலும் கோலி கண்டிப்பாக அதில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kohli will be in the team but Rohit Sharma will lead in West Indies series.
Story first published: Thursday, July 18, 2019, 11:08 [IST]
Other articles published on Jul 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X