For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே பயன்படுத்திய
பார்முலாவை தற்போது கேப்டன் கோலியும் பின்பற்ற உள்ளார்.

பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை
2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது. உலகம்
முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் இந்திய அணியை திரும்பி பார்த்துள்ளனர் .

என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!

இந்திய அணியின் வெற்றிக்கு ரஹானேவின் கேப்டன்சி முக்கிய காரணமாக
பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை
இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது.

கேப்டன்

கேப்டன்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த தொடரை இந்தியா வெல்ல ரஹானேவின் பார்முலா

ஒன்று முக்கிய காரணமாக இருந்தது. ரஹானேவை பொதுவாக பவுலர்களின் கேப்டன்

என்று கூறுவார்கள். பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம்

இவர் கொடுப்பார். பவுலர்களை அதிக அளவில் ரஹானே ஆதரிப்பார்.

கோலி

கோலி

ஆனால் கோலி பவுலிங்கை விட பேட்டிங்கிற்கு அதிகம் முக்கியத்துவம்

கொடுப்பார். 4 பவுலர்கள் இருந்தால் போதும் என்று நினைப்பவர் கோலி. இரண்டு

ஸ்பீட் பவுலர்கள், இரண்டு ஸ்பின் பவுலர்கள் போதும் என்று நினைப்பவர் கோலி.

ஆனால் ரஹானே கூடுதல் பவுலர்களை கேட்பார்.

ரஹானே

ரஹானே

ரஹானே 5 பவுலர்களுடன் ஆடுவதை விரும்ப கூடியவர். அதனால்தான் ஆஸ்திரேலிய

தொடரில் கோலி வெளியேறிய பின் பேட்ஸ்மேனை இறக்காமல் பவுலிங் ஆல் ரவுண்டரான

ஜடேஜாவை ரஹானே இறக்கினார். 6 பேட்ஸ்மேன்கள் 5 பவுலர்கள் இருந்தால் நன்றாக

இருக்கும் என்று நினைக்க கூடியவர் ரஹானே.

ரஹானே பார்முலா

ரஹானே பார்முலா

ரஹானேவின் இந்த 5 பவுலர்கள் பார்முலா ஆஸ்திரேலிய டெஸ்டில் பெரிய அளவில்

உதவியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த ரஹானேவின் இந்த பவுலிங் படைதான் முக்கிய

காரணமாக இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இதே பார்முலாவை

கோலி பயன்படுத்த போகிறார் என்கிறார்கள். 5 பவுலர்கள் கான்செப்ட் வெற்றிபெற்றுவிட்டது.

கான்செப்ட்

கான்செப்ட்

இதனால் இனி 4 பவுலர்களுடன் களமிறங்கினால் அது கோலிக்கு சிக்கலாகும். இதனால்

வேறு வழியின்றி 5 பவுலர்களை இறக்க கோலி முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக 5

பவுலர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, January 28, 2021, 18:15 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Kohli will use Rahane bowling formula for Team India against England inChennai test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X