For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவிற்கு ஓப்பனர் ரெடி.. அந்த வீரரை ரிலீஸ் செய்த கேகேஆர்.. தினேஷ் கார்த்திக் இடம் ஃசேப்!

கொல்கத்தா: கொல்கத்தா அணியில் இருந்து மொத்தம் 5 வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்படவில்லை.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில் தற்போது வீரர்களின் ரிட்டென்சன் பட்டியல் வெளியாகி வருகிறது.

அடிபொலி.. ராஜஸ்தான் கேப்டன் பதவியை அலங்கரிக்கும் சஞ்சு சாம்சன்.. புதிய இயக்குனர் யாருன்னு பாருங்க! அடிபொலி.. ராஜஸ்தான் கேப்டன் பதவியை அலங்கரிக்கும் சஞ்சு சாம்சன்.. புதிய இயக்குனர் யாருன்னு பாருங்க!

ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் வெளியேற்றப்படவில்லை. ஒரு சில வீரர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். டாம் பான்டன், கிறிஸ் கிரீன், நிகில் நாயக், சித்தார்த் எம், சித்தேஷ் லாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இது போக 11 இந்திய வீரர்கள் 7 வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், நிதிஷ் ராணா, சுப்மான் கில், ரிங்கு சிங் , ராகுல் திரிபாதி , கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லோகி பெர்குசன், பாட் கும்மின்ஸ் , பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியார்ஆகியோர் அணியில் தொடர்வார்கள்.

 கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

மேலும் சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி , சுனில் நரேன், ஆண்ட்ரு ரசல், டிம் செய்ப்பார்ட், அலிகான் ஆகிய முக்கிய வீரர்களும் அணியில் இடம்பெற உள்ளனர். கொல்கத்தா அணி இதன் மூலம் பெரும்பாலும் அதே அணியோடு விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் அவர் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கிறிஸ் கிரீன் சென்னை அணியில் ஓப்பனிங் வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 20, 2021, 19:27 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Kolkata releases 5 players ahead of IPL 2021; Dinesh Karthik retained by KKR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X