பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - ஏமாற்றத்தை அளித்த கோனேரு ஹம்பி

மாஸ்கோ: கடந்த சனிக்கிழமை உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, இதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டியில் தோல்வியடைந்து 12வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் 7 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்த ஹம்பி, தொடர்ந்து இரண்டாவது நாளில் 3 ரவுண்டுகள் தோல்வியடைந்ததால் அவரது பதக்கக் கனவு தகர்ந்தது.

ஆந்திராவை சேர்ந்த கோனேரு ஹம்பி 12வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி 25வது இடத்தை பிடித்தார்.

சச்சினின் மனதை பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கிரிக்கெட் வீடியோ.. அவர் சொன்ன வார்த்தை!

ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

இந்தியாவின் செஸ் போட்டிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார் ஆந்திராவை சேர்ந்த கோனேரு ஹம்பி. குழந்தை பிறப்பின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஓய்வில் இருந்த அவர், கடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

12வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஹம்பி

12வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஹம்பி

இந்நிலையில் அங்கேயே நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டியில் தோல்வியுற்ற கோனேரு ஹம்பி 12வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாஸ்கோவில் இருதினங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் நாளில் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த ஹம்பி இரண்டாவது நாளில் தொடர் 3 ரவுண்டுகளில் பெற்ற தோல்வி காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்தார்.

10.5 புள்ளிகளுடன் 12வது இடம்

10.5 புள்ளிகளுடன் 12வது இடம்

இந்த போட்டியின் 17வது சுற்றில் 10.5 புள்ளிகளை பெற்ற கோனேரு ஹம்பி 12வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி 25வது இடத்தை பிடித்தார்.

வெற்றி பெற்ற ரஷ்ய வீராங்கனை

வெற்றி பெற்ற ரஷ்ய வீராங்கனை

ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற கோனேரு ஹம்பியின் இரண்டாவது பதக்கக் கனவு தகர்ந்த நிலையில், ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ இந்த போட்டியில் 13 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல ஆடவர் பிரிவில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Koneru Humpy finishes 12th position in Blitz Chess Championship
Story first published: Wednesday, January 1, 2020, 14:48 [IST]
Other articles published on Jan 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X