கேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது!

KPL match fixing | கேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இரு வீரர்கள் கைது

பெங்களூரு : மத்திய குற்றப் பிரிவு கர்நாடகா பிரீமியர் லீக் (கேபிஎல்) தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு முக்கிய கிரிக்கெட் வீரர்களை கைது செய்துள்ளது.

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் மற்றும் அப்ரர் காஸி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.

கௌதம் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் ஆவார். அப்ரர் காஸி அந்த அணியின் விக்கெட் கீப்பர். இவர்கள் இருவரும் கேபிஎல் இறுதிப் போட்டியில் ஹுப்ளி டைகர்ஸ் அணிக்கு எதிராக மெதுவாக ஆட ரூ.20 லட்சம் பணம் பெற்றனர்.

8 அடி ஆப்கன் ரசிகருக்கு ரூம் கொடுக்க மறுத்த ஹோட்டல்கள்! 3 நாட்கள் ரோடு ரோடாக சுற்றிய கொடுமை!

அந்த விவகாரத்தில் தான் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. விசாரணை முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், கேபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட மேலும் பலரை விரைவில் காவல்துறை கைது செய்யும் என பரபரப்பாக கூறப்படுகிறது.

கௌதம் ஐபிஎல் தொடரில் பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 94 முதல் தர போட்டிகளில் 4716 ரன்கள் குவித்துள்ளார். காஸி நாகலாந்து அணிக்காக தற்போது ஆடி வருகிறார்.

கேபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட பலரும் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். முன்னதாக நிஷாந்த் சிங் ஷெகாவத் கைது செய்யப்பட்டார். பெல்காவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஸ்பாக் அலி தாராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேபிஎல் மேட்ச் பிக்சிங் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது கர்நாடகா கிரிக்கெட் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
KPL match fixing : Two players CM Gautam and Abrar Kazi arrested over match fixing scandal.
Story first published: Thursday, November 7, 2019, 14:46 [IST]
Other articles published on Nov 7, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X