காலங்கள் கடந்து உங்கள் பாடல்கள் கேட்கும்.. வருத்தமாக உள்ளது.. எஸ்பிபி மரணம்.. ஸ்ரீகாந்த் இரங்கல்

சென்னை: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு அப்போதில் இருந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் உடல்நிலை அவ்வப்போது நலிவடைந்தும் முன்னேறியும் வந்தது.

கொரோனா

கொரோனா

அதன்பின் கடந்த 7ம் தேதி கொரோனாவில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது. ஆனால் இவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இன்று காலமானார்

இன்று காலமானார்

இந்த நிலையில் நேற்று மதியம் இவரின் உடல்நிலை மோசமானது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை நலிவடைந்தது. நேற்று இரவில் இவரின் உடல் நிலை மேலும் நலிவடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி உயிர் பிரிந்தது.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரின் மறைவிற்கு திரை உலகினர், கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், லெஜண்டரி பாடகர் எஸ்.பி.பி மரணம் குறித்த செய்தி கேட்கவே வருத்தமாக உள்ளது.

 வருத்தமாக உள்ளது

வருத்தமாக உள்ளது

அவரின் பாடல்கள் காலங்கள் தாண்டியும் எதிரொலிக்கும். அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. ஓம் சாந்தி, என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்து உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Krishnamachari Srikanth condolences for SP Balasubramaniam demise
Story first published: Friday, September 25, 2020, 14:07 [IST]
Other articles published on Sep 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X