For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குல்தீப் இப்ப பௌலிங் போடுறியா? இல்ல பௌலரை மாத்தவா? மிரட்டிய தோனி

துபாய் : ஆசிய கோப்பையில் நேற்று இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தோனி, குல்தீப் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பந்து வீசிய இந்தியா ஆப்கன் அணியின் பந்துவீச்சை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியது. ரன் குவிக்க ஒத்துழைக்காத துபாய் ஆடுகளத்தில், ஆப்கன் வீரர் ஷாசாத் அதிரடியாக சிக்ஸர் மழை பொழிந்து ரன்களை குவித்தார்.

[ 2 விஷயங்களை நான் பேச மாட்டேன்.. ஏன்னா அபராதம் போட்ருவாங்க.. தோனி ஏன் இப்படி சொன்னார்? ]

இந்தியா பந்துவீச்சில் முக்கிய வீரர்களான புவனேஸ்வர், பும்ரா, சாஹல் இல்லாமல் தடுமாறியது. அப்போது குல்தீப்பை பந்து வீச அழைத்தார் தோனி.

இப்ப பௌலர மாத்தவா

இப்ப பௌலர மாத்தவா

குல்தீப் தனக்கு ஏற்றாற்போல பீல்டிங் நிறுத்துமாறு தோனியிடம் கேட்டார். தோனி அதற்கு பதில் சொல்லாமல் இருந்தார். தொடர்ந்து குல்தீப் பீல்டிங் மாற்றம் பற்றியே கூற, தோனி, "இப்ப பௌலிங் போடுறியா, இல்ல பௌலர மாத்தவா?" என கேட்டார்.

இணையத்தில் வைரல்

அது ஸ்டம்ப் பின்னே இருந்த மைக்கில் பதிவாகி, தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெளிவாக கேட்டது. ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

மிரட்டும் தோனி

மிரட்டும் தோனி

தோனி எப்போதும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பல யோசனைகளை கூறி விக்கெட் விழ காரணமாக இருப்பார். குல்தீப் இப்போது தான் சர்வதேச போட்டிகளில் ஆடத் துவங்கியுள்ளார். சில சமயம் அவர் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும் போது, அனுபவம் வாய்ந்த தோனி அவரை செல்லமாக மிரட்டி விடுகிறார்.

நான் என்ன மடையனா?

நான் என்ன மடையனா?

ஏற்கனவே, இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக குல்தீப் குறிப்பிட்டு இருந்தார். அந்த சம்பவத்தில், தோனி பீல்டிங் மாற்ற கேட்ட போது, குல்தீப் மறுத்துள்ளார். அப்போது தோனி "நான் என்ன மடையனா? 300 போட்டிகளில் ஆடி இருக்கிறேனே!" என அவரை கடிந்து கொண்டுள்ளார். அந்த ஓவரிலேயே விக்கெட் எடுத்தார் குல்தீப்.

Story first published: Wednesday, September 26, 2018, 14:46 [IST]
Other articles published on Sep 26, 2018
English summary
Kudleep yadav was warned by Dhoni when he asks for changing fileding in afghan match at Asia cup 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X