குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை

கேன்பெரா : ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவரை களமிறக்கலாம் என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றைய 3வது ஒருநாள் போட்டியில் சஹலுக்கு பதிலாக இறக்கப்பட்ட குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 57 ரன்களை மட்டுமே கொடுத்து கேமரான் கிரீன் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

3 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கேன்பெராவில் நடைபெறவுள்ளது.

போட்டி போட்டு வந்த பணக்காரர்கள்.. பிளானை மாற்றிய கங்குலி.. பிசிசிஐயில் மெகா திட்டம்.. பரபர தகவல்!

தொடரை வெற்றிகொண்ட ஆஸ்திரேலியா

தொடரை வெற்றிகொண்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. தொடரை இழந்த நிலையிலும் நேற்றைய 3வது போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

டி20 முதல் போட்டியில் களமிறக்கலாம்

டி20 முதல் போட்டியில் களமிறக்கலாம்

நேற்றைய போட்டியில் சஹலுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 57 ரன்களை மட்டுமே கொடுத்து கேமரான் கிரீன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து அவரை நாளை துவங்கவுள்ள டி20 தொடரின் முதல் போட்டியில் களமிறக்கி எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பரிசோதிக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

கவாஸ்கர் பாராட்டு

கவாஸ்கர் பாராட்டு

இந்தியா டுடே சேனலுக்காக பேசிய சுனில் கவாஸ்கர், குல்தீப் யாதவ் மிண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் நாளைய டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பௌலிங் செய்தால், அதன்மூலம் மற்ற பௌலர்களுக்கு சுமை குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியா இறக்கப்பட வேண்டும்

பாண்டியா இறக்கப்பட வேண்டும்

பாண்டியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள கவாஸ்கர், அவர் 4வதாக இறக்கப்பட வேண்டும் என்றும் முதலில் விளையாடவரும் 3 வீரர்கள் 14 ஓவர்களுக்கு நிலைத்து ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் துவக்க வீரர்களாகவும் 3வதாக கோலியும் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

15 ஓவர்களுக்கு நிலைக்க வேண்டும்

15 ஓவர்களுக்கு நிலைக்க வேண்டும்

15 ஓவர்களுக்கு துவக்க வீரர்கள் நிலையாக விளையாடும் நிலையில், பாண்டியா, மீதமுள்ள போட்டியை முறையாக கையாள்வார் என்றும் கவாஸ்கர் கூறினார். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் விழும் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை இறக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். முதலில் விளையாடும் 5 வீரர்கள் சிறப்பாக விளையாடினால், அடுத்த வீரர்கள் குறித்த கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கவாஸ்கர் பாராட்டு

கவாஸ்கர் பாராட்டு

மேலும் 12,000 ரன்களை கடந்துள்ள விராட் கோலிக்கும் கவாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்டர் -19 காலத்திலிருந்தே அவரது ஆட்டத்தை தான் கண்டு வருவதாகவும், 60 அரைசதங்கள் மற்றும் 43 சதங்களை விராட் கோலி அடித்துள்ளது நம்ப முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kohli's record unbelievable consistency, Truly phenomenal -Gavaskar said
Story first published: Thursday, December 3, 2020, 15:06 [IST]
Other articles published on Dec 3, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X