சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் "பழைய" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்!

சென்னை: இங்கிலாந்து எதிராக சென்னையில் நடக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்த குல்தீப் யாதவ் தொடர் முழுக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் அறிவிக்கப்பட்ட போதே டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருந்தார்.

களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே!

15 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்றார். ஆனால் இவருக்கு கடைசி வரை இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை.

அணி தேர்வு

அணி தேர்வு

இந்த நிலையில் இன்று அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்த நிலையில் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்று இருக்க வேண்டும்.குல்தீப் யாதவ்தான் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு பெற்று இருக்க வேண்டும். முக்கியமாக குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.

 ஆனால் கிடைக்கவில்லை

ஆனால் கிடைக்கவில்லை

அஸ்வின் போன்ற அனுபவ வீரர் இல்லாத நிலையில் சுமாரான அனுபவம் கொண்ட குல்தீப் யாதவ்தான் களமிறக்கப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் 15 பேர் கொண்ட அணியில் முதலில் தேர்வு செய்யப்படாத வாஷிங்க்டன் சுந்தருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுந்தரும் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கினார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு பேரும் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சென்னையில் இவர் நன்றாக பந்து வீசி இருக்கிறார்.

பவுலிங்

பவுலிங்

சென்னை பிட்ச் இவரின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதேபோல் இவர் நீண்ட நாட்களாக விடாமல் பயிற்சி எடுத்து வருகிறார். முழுக்க பயிற்சியிலேயே இவர் மூழ்கி உள்ளார். இதனால் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இந்திய அணியின் முக்கியமான வீரராக உருவெடுப்பார் என்று இந்திய அணி நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

 நம்புகிறார்கள்

நம்புகிறார்கள்

அதன்படி இந்திய அணியில் அஸ்வின், பும்ரா, இஷாந்த், ஷரத்துல், குல்தீப் ஆகிய ஐந்து பவுலர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஷரத்துல் தாக்கூருக்கு பதிலாக அணியில் சிராஜ் இடம்பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. குல்தீப் யாதவ்தான் இந்த டெஸ்ட் தொடரில் கேம் சேஞ்சராக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kuldeep Yadav may get a chance against England in the first two test in Chennai.
Story first published: Saturday, January 23, 2021, 13:31 [IST]
Other articles published on Jan 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X