For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'நேரமே சரியில்ல.. எல்லாம் தப்பாகுது' - உடைந்த குரலில் உருகிய குல்தீப் யாதவ்

மும்பை: ஒரு நேரத்தில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் தொட்டதெல்லாம் பொன்னாச்சு. இன்று அவர் தனது வாழ்க்கையின் மிக மோசமான பக்கங்களை படித்துக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

இது எனக்கு போதாத காலம்.. உடைந்த குரலில் உருகிய Kuldeep Yadav

2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்து சரணடைந்த பிறகு, 'அணிக்கு இனி ரிஸ்ட் (மணிக்கட்டு) ஸ்பின்னர்கள் தான் தேவை' என்று கோச் ரவி சாஸ்திரி சொல்ல, மெல்ல மெல்ல அஷ்வினும், ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட, அணிக்குள் யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவ்வும் ஆளுமை செலுத்தத் தொடங்கினர்.

தொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்கதொடர்ந்து 3 முறை இந்திய வீரர்கள் பெற்ற விருது ஒருவழியா அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுத்துருக்காங்க

சாஸ்திரி சொன்னது சரி தான் போல.. என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு, இருவரும் அதகளப்படுத்த, 'ஸ்பின் ட்வின்ஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டனர். ஆனால், இருவரின் ஆயுளும் ஈசல் போல குறுகிய காலத்துக்கே இருந்தது.

 விளாசிய பேட்ஸ்மேன்கள்

விளாசிய பேட்ஸ்மேன்கள்

குறிப்பாக, குல்தீப் யாதவ்வின் பெர்ஃபாமன்ஸ் நாளுக்கு நாள், மாசத்துக்கு மாசம் அதலபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது. அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளாசத் தொடங்கினர். அவை மைதானத்தை விட்டு வெளியே பறந்தன. இதனால், அவரே நம்பிக்கை இழந்தார். அந்த இடத்தில் தான் சரிந்தார். ஆம்! நம்மால் முடியாதோ.. என்று தனது 'கான்ஃபிடன்ஸ்'-ஐ என்று இழந்தாரோ, அன்று முதல் இன்று வரை தனது சர்வைவல்-காக போராடி வருகிறார்.

 அசத்திய நெஹ்ரா

அசத்திய நெஹ்ரா

சச்சின், தோனி, கோலி, ஜாகீர் என்று இதுவரை எத்தனையோ ஹீரோக்கள் கூட தங்கள் ஃபார்மை இழந்து தடுமாறி, தள்ளாடி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து, பிறகு கடுமையாக போராடி களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் தான். இவ்வளவு ஏன்.. நம்ம ஆசிஷ் நெஹ்ராவை எடுத்துக் கொள்ளுங்கள். 90'ஸ் கிட்ஸ் காலத்தில் ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், சைமண்ட்ஸ், கிப்ஸ், காலிஸ், சங்கக்காரா என்று ரகரகமாக அடிவாங்கிய ஃபாஸ்ட் பவுலர் அவர். ஒருக்கட்டத்தில் அணியில் இருந்தே காணாமல் போனார். கங்குலி, டிராவிட் காலமெல்லாம் முடிந்து தோனி அணியைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்து ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து துல்லியமான லைன் அன்ட் லெந்த்தில் பந்தை பிட்ச் செய்து மிரள வைத்தார். அவரது சிறப்பான பெர்ஃபாமன்ஸால் இந்திய டி20 அணியின் மெயின் பவுலராக உருவெடுத்தார். அவருடன் ஒன்றாக இணைந்து விளையாடிய வீரர்கள் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்க, நெஹ்ரா வெரைட்டி கலந்து விருந்து வைத்துக் கொண்டிருந்தார். இவரை விடவா ஒரு சாம்பிள் வேண்டும் குல்தீப்புக்கு?

 போதாத காலம்

போதாத காலம்

ஆனால், அப்படியொரு மாஸ் 'பவுன்ஸ் பேக்' தான் குல்தீப்பிடம் மிஸ் ஆகிறது. அவர் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரால் மீண்டு வர முடியவில்லை. இந்த சூழலில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தளத்துக்கு மனம்விட்டு பேட்டி அளித்துள்ள குல்தீப், 'நீங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால், உங்களது தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். அதுவே தொடர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தால், அது நிலையை மேலும் மோசமாக்கும். கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் விளையாடிய போது, பெரும் மன அழுத்தத்தை உணர்ந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. போன வருடத்தை விட இந்த வருடம் மேலும் எனக்கு மோசமாகிவிட்டது. இது எனக்கு போதாத காலம்.

 பேசிய அனுபவம்

பேசிய அனுபவம்

ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நின்று ஆலோசனை அளிக்கும் அனுபவம் வாய்ந்த தோனி போன்ற ஒருவரை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம். அவருடைய அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்கிறோம். இப்போது ரிஷப் அந்த இடத்தில் இருக்கிறார். அனுபவங்களைப் பெற்று எதிர்காலத்தில் அவரும் டிப்ஸ் வழங்குவார் என நம்புகிறேன்" என்றார்.

Story first published: Wednesday, May 12, 2021, 10:06 [IST]
Other articles published on May 12, 2021
English summary
kuldeep opens about his poor performance - குல்தீப் யாதவ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X