For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மாதிரி ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்க நாங்க 2 பேரும் கொடுத்து வைச்சுருக்கணும்!!

Recommended Video

Kuldeep praises Dhoni | தோனியை புகழும் இளம் பந்துவீச்சாளர் குலதீப்

மும்பை : இந்திய அணியில் சமீபத்தில் நிரந்தர இடம் பிடித்த வீரர் குல்தீப் யாதவ். ஒருநாள் போட்டி அணி மட்டுமில்லாமல், டெஸ்ட் அணியிலும் அவர் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரிலும், அடுத்து உலகக்கோப்பை தொடரிலும் கலக்க உள்ள குல்தீப் யாதவ், தான் எளிதாக பந்து வீசுவதற்கு முக்கிய காரணம் தோனி தான் எனக் கூறியுள்ளார்.

விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் கன்ஃபார்ம்.. காரணம் தினேஷ் மோங்கியா, யுவராஜ் சிங்!! என்னாது? விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் கன்ஃபார்ம்.. காரணம் தினேஷ் மோங்கியா, யுவராஜ் சிங்!! என்னாது?

தோனியின் உதவி

தோனியின் உதவி

தோனி பலமுறை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் வேட்டை நடத்த உதவியுள்ளார். அஸ்வின் - ஜடேஜா இருந்த போதும், அடுத்து குல்தீப் யாதவ் - சாஹல் பந்து வீசி வரும் போதும், நாம் இதை பல முறை பார்த்திருக்கிறோம். தோனியின் உதவி குறித்து குல்தீப் யாதவ் பல முறை பேசியிருக்கிறார். சமீபத்தில் பேசிய போது, தோனியை புகழ்ந்து தள்ளினார்.

வழிகாட்டி

வழிகாட்டி

ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குல்தீப் யாதவ், "நான் அறிமுகமானதில் இருந்து தோனியுடன் ஆடி வருகிறேன். அவர் ஏதேனும் செய்தி சொல்ல வேண்டுமென்றால் உடனடியாக சொல்லுவார். எங்களுக்கு வழிகாட்டியாக எப்போதும் இருக்கிறார். விக்கெட் கீப்பர் உங்களை அந்தளவிற்கு ஆதரித்தால், அது பந்துவீச்சாளருக்கு எளிதாக இருக்கும்." என குறிப்பிட்டார்.

தோனியின் அனுபவம்

தோனியின் அனுபவம்

"பல சமயங்களில் சூழ்நிலையை பந்துவீச்சாளரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், விக்கெட் கீப்பர் புரிந்து கொள்ள முடியும். தோனி அப்படிப்பட்டவர். அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. ஆவர் எங்களுக்கு சிறிய விஷயங்களை கூட கூறுவார். அவர் கூறவில்லை என்றால், நானே அவரிடம் வழிகாட்டுமாறு கேட்பேன்" என்றார் குல்தீப் யாதவ்.

கொடுத்து வைச்சுருக்கணும்

கொடுத்து வைச்சுருக்கணும்

"சாஹல் மற்றும் நான், இருவரும் தோனியுடன் ஆடுவதை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறோம். ஸ்டம்ப்புக்கு பின் தோனி இருப்பதால், எங்கள் பந்துவீச்சு எளிதாகி இருக்கிறது" என குல்தீப் புகழ்ந்து தள்ளினார்.

Story first published: Thursday, March 21, 2019, 9:08 [IST]
Other articles published on Mar 21, 2019
English summary
Kuldeep Yadav praises help of Dhoni from behind the stumps
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X