For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அதுல்ல.. குல்தீப் யாதவ் எடுத்த ஒரே ஒரு விக்கெட்.. பழைய விஷயங்களை கிளறும் ரசிகர்கள் - வீடியோ

லக்னோ: தென்னாப்பிரிக்காவுடனான டொடரில் குல்தீப் யாதவ் செய்த ஒரு விஷயம் 2019 உலகக்கோப்பையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணியில் என்னுடைய இடத்திற்கு ஆபத்து..தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சூர்யகுமார்..தோல்வி எதனால்?இந்திய அணியில் என்னுடைய இடத்திற்கு ஆபத்து..தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய சூர்யகுமார்..தோல்வி எதனால்?

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

இந்நிலையில் இந்த போட்டியில் குல்தீப் யாதவ் செய்த விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை குல்தீப் யாதவ் வீச, எய்டன் மர்க்ரம் ஸ்ட்ரைக்கில் நின்றார். அதிரடி வீரரான மர்க்ரம், அந்த ஓவரில் ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட்டானார். ஆனால் அந்த விக்கெட் தான் ஸ்பெஷலான ஒன்று.

மர்க்ரம் விக்கெட்

மர்க்ரம் விக்கெட்

லெக் சைட் டேர்ன் ஆகும் வகையில் தான் பந்துவீசப்பட்டது. பந்து ஆஃப் சைட் திசையில் நன்கு தள்ளிப்போடப்பட்டதால், அந்த அளவிற்கு டேர்ன் ஆகாது என பேட்ஸ்மேன் நினைத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து மிடில் ஸ்டம்ப்பிற்கு நுழையும் அளவிற்கு டேர்ன் ஆனது. இதே போன்ற அறிய நிகழ்வு 2019ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் நடந்துள்ளது.

ட்ரெண்டிங் வீடியோ

2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அப்போட்டியில் பாபர் அசாமையும் இதே போன்ற முறையில் தான் குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்திருந்தார். எனவே அதனை நினைவுக்கூறும் வகையில் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 அபார பேட்டிங்

அபார பேட்டிங்

ஏய்டன் மர்க்ரம் அவுட்டான போதும், அடுத்து வந்த வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியை தூக்கி நிறுத்தினர். ஹெய்ன்ரிச் க்ளாசன் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாச 40 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்களை குவித்தது.

Story first published: Thursday, October 6, 2022, 22:33 [IST]
Other articles published on Oct 6, 2022
English summary
Kuldeep yadav's Wicket in south africa 1st ODI Remembers the 2019 World cup incident
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X