For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெர்லின்' இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை... குல்தீப்பிடம் சிக்கி சின்னாபின்னமானது!

சுழற்பந்து வீச்சை சமாளிக்க மெர்லின் என்ற பந்துவீசும் மெஷினில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி எடுத்தனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. குல்தீப் யாதவின் சுழலில் ஆட்டமிழந்தனர்.

நாட்டிங்காம்: சின்னமான் பவுலரான குல்தீப் யாதவின் சுழலை சமாளிப்பதற்கு மெர்லின் என்ற பவுலிங் மெஷினைப் பயன்படுத்தியும், இங்கிலாந்துக்கு பலன் கிடைக்கவில்லை. முதல் ஒரு தினப் போட்டியில் குல்தீப் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் நடந்த டி-20 தொடரை 2-1 என வென்றது. அந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் குல்தீப் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

kuldeep yadav took 6 wickets

குல்தீப் யாதவின் சுழல்பந்து வீச்சை சமாளிப்பதற்காக, மெர்லின் என்ற பவுலிங் மெஷினில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி எடுதத்தனர்.

இன்று நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருதினப் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், மெர்லின் பயிற்சி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. கொத்து கொத்தாக குல்தீப்பின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் குல்தீப். ஒருதினப் போட்டிகளில் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 6 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Thursday, July 12, 2018, 20:43 [IST]
Other articles published on Jul 12, 2018
English summary
England were bundled by kuldeep yadav, who took 6 wickets. Merlin bowling machine not handy for england.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X