For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்…!! உலகின் முதல் கிரிக்கெட் கிளப்பின் தலைவர்… பெஸ்ட் விக்கெட் கீப்பருக்கு கிடைத்த கவுரவம்

மெல்போர்ன்:இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா, மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் குமார் சங்கக்காரா. அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6வது இடத்திலும் இருக்கிறார்.

பல்வேறு சாதனைகளுக்கு உரிய அவர், இங்கிலாந்தில் உள்ள மிகவும் பிரபலமான மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகாலமாக செல்வாக்கு மிக்க எம்.சி.சியில் அவர் கவுரவர் ஆயுள் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.

இங்கிலாந்துக்கு நோ சான்ஸ்.. இந்தியாவுக்கு தான் உலக கோப்பை...! அடித்துச் சொல்லும் மாஸ்டர் பிளாஸ்டர் இங்கிலாந்துக்கு நோ சான்ஸ்.. இந்தியாவுக்கு தான் உலக கோப்பை...! அடித்துச் சொல்லும் மாஸ்டர் பிளாஸ்டர்

முதல்முறை தலைவர்

முதல்முறை தலைவர்

மார்லிபோன் கிரிக்கெட் சங்க வரலாற்றில் பிரிட்டிஷ் அல்லாத ஒருவர் முதல் முறையாக தலைவர் ஆவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமை ஆசியாவைச் சேர்ந்த சங்கக்காராவுக்குக் கிடைத்துள்ளது. இதுவரை 168 பேர் இதன் தலைவராக இருந்துள்ளனர். அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்த மதிப்பு வாய்ந்த பதவியில் சங்கக்காரா இருப்பார்.

மிகப்பெரிய கவுரவம்

மிகப்பெரிய கவுரவம்

இது குறித்து சங்கக்காரா கூறியதாவது: எம்சிசி பிரெசிடென்ட் பதவி எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்தப் பொறுப்பை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் எம்சிசி உலகின் மிகச்சிறந்த ஒரு கிரிக்கெட் கிளப். உலக அளவில் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.

பெருமையாக உள்ளது

பெருமையாக உள்ளது

கிரிக்கெட்டுக்காக நிறைய எம்சிசி செய்திருக்கிறது. இத்தகைய அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது பெருமையாக உள்ளது என்றார். கிரிக்கெட் விதிகளின் பாதுகாவலன் மற்றும் இயற்றுநரான எம்சிசி, 1787ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை 168 பேர் இதன் தலைவராக இருந்துள்ளனர்.

போட்டி விதிமுறைகள்

போட்டி விதிமுறைகள்

பிரிட்டிஷ் அல்லாத ஒருவர் முதல் முறையாக எம்சிசி தலைவராவது என்பது இதுவே முதல் முறை. அந்த பெருமையை ஆசியாவை சேர்ந்த சங்கக்காராவுக்கு கிடைத்துள்ளது, குறிப்பிடத் தக்கது. கிரிக்கெட் போட்டிகளை நிர்வகித்து வரும் ஐசிசி அமைப்புக்கு கிரிக்கெட் ஆட்டங்களுக்கான விதிமுறைகளைப் பரிந்துரை செய்யும் பணியை எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Story first published: Friday, May 3, 2019, 15:04 [IST]
Other articles published on May 3, 2019
English summary
Kumar sangakkara named as first non british president of mcc.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X