கேப்டன் விராட் கோலிக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் தேவை.. அழுத்தம் திருத்தமாக சொன்ன சங்ககாரா!

Sangakkara about Dhoni | கோலிக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் தேவை : சங்ககாரா!

மும்பை : உலகக்கோப்பையில் எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை சமாளிக்க இந்திய அணி கேப்டன் கோலிக்கு, தோனி பெரிய உதவியாக இருப்பார் என முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இந்த ஆண்டு துவக்கத்திற்கு முன் வரை தோனி உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்பதே சந்தேகமாகவே இருந்தது. அதற்கு காரணம், தோனியின் பேட்டிங் பார்ம் படு பாதாளத்தில் இருந்தது. விக்கெட் கீப்பிங்கில் மட்டும் எப்போதும் போல கில்லியாக செயல்பட்டு வந்தார்.

பார்மை மீட்டார் தோனி

பார்மை மீட்டார் தோனி

2019இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பழைய தோனியாக மாறியவர், அதிரடி காட்டி தன் பார்மை மீட்டார். இதனால், தோனி உலகக்கோப்பையில் உறுதியாக பங்கேற்பார் என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

யாருக்கு இடம்?

யாருக்கு இடம்?

இருந்தாலும், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது, யாருக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அனுபவம் முக்கியம்

அனுபவம் முக்கியம்

இது பற்றி சங்ககாரா கூறுகையில், உலகக்கோப்பை என்று வந்தால் அனுபவம் தான் முக்கியம். தோனி நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என கூறினார். தற்போது தோனி தான் இந்திய அணியில் மூத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக உலகக்கோப்பை உட்பட பல தொடர்களை வென்று கொடுத்த அனுபவம் மிக்கவர்.

அமைதியானவர் வேண்டும்

அமைதியானவர் வேண்டும்

மேலும், உலகக்கோப்பையில் மிகவும் கடினமான சூழ்நிலை வரும் போது, அனுபவத்துடன், அமைதியான ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என விராட் கோலி நினைப்பார் என கூறினார் சங்ககாரா.

வெற்றிக்கு காரணமானவர்

வெற்றிக்கு காரணமானவர்

உண்மையில், தோனி பேட்டிங் செய்யாவிட்டால் கூட விக்கெட் கீப்பிங், கோலிக்கு ஆலோசனை கூறுவது, இளம் வீரர்களை வழி நடத்திச் செல்வது என பல வகைகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறார்.

தோனி நிச்சயம் உண்டு

தோனி நிச்சயம் உண்டு

சங்ககாரா கூறுவது போல தோனி நிச்சயம் உலகக்கோப்பையில் ஆடப் போகிறார். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் நிச்சயம் மாற்று விக்கெட் கீப்பராக உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Kumar Sangakkara says Dhoni will play in World cup 2019 and support Kohli.
Story first published: Wednesday, February 13, 2019, 17:07 [IST]
Other articles published on Feb 13, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more