ஐபிஎல் போட்டியிலிருந்து அனில் கும்ப்ளே திடீர் விலகல்

By Sutha
மும்பை: ஐபிஎல்-4 போட்டித் தொடரிலிருந்து அனில் கும்ப்ளே விலகிக் கொண்டுள்ளார். கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான பணிகளில் தான் பிசியாக இருப்பதால் விரைவில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் தான் பங்கேற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 4வது போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதிலிருந்து கும்ப்ளே விலகிக் கொண்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக 2009 மற்றும் 2010 ஆகிய இரு சீசன்களில் செயல்பட்டார் கும்ப்ளே.

தனது விலகல் குறித்து கும்ப்ளே கூறுகையில், ஐபிஎல் 4வது போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்திலிருந்து விலகுகிறேன். ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளையும் சிறந்த முறையில் அனுபவதி்தேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் கும்ப்ளே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Former India captain Anil Kumble today pulled put of this weekend's Indian Premier League auction, citing his involvement in cricket administration and other commitments. Kumble, who captained Royal Challengers Bangalore in two IPL seasons, in 2009 and 2010, said he was withdrawing from the January 9-10 auction because of business commitments, his association with cricket administration and wildlife in various capacities.
Story first published: Tuesday, January 4, 2011, 12:33 [IST]
Other articles published on Jan 4, 2011
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X