For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க பண்ண தப்பை நான் பண்ண மாட்டேன்.. அஸ்வினுக்கு பாடம் எடுத்த க்ருனால் பண்டியா!! குவியும் பாராட்டு!

சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் க்ருனால் பண்டியா, அஸ்வினுக்கு பாடம் புகட்டும் வகையில் செயல்பட்டது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் அணி சேஸிங் செய்தது.

பந்து எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கு.. தப்புக் கணக்கால் அவுட்டான கொல்கத்தா வீரர்! பந்து எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கு.. தப்புக் கணக்கால் அவுட்டான கொல்கத்தா வீரர்!

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில், மாயங்க் அகர்வால், ராகுல் பேட்டிங் செய்து வந்தனர். 10வது ஓவரில் நான்காவது பந்தை வீச வந்த க்ருனால் பண்டியா, ஒரு கணம் பந்துவீச்சை நிறுத்தினார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அப்படியே ஸ்டம்ப் இருக்கும் திசை நோக்கி திரும்பிய அவர், பெயில்சை தகர்க்காமல், கிரீஸை தாண்டிச் சென்ற பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலுக்கு எச்சரிக்கை விடுத்து மீண்டும் பந்துவீசச் சென்றார்.

அஸ்வின் - பட்லர் நிகழ்வு

அஸ்வின் - பட்லர் நிகழ்வு

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லரை இதே சூழ்நிலை வந்த போது ரன் அவுட் செய்தார். முதலில் எச்சரிக்கை விடுக்காமல் ரன் அவுட் செய்ததற்கு, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆறுதல்

ஆறுதல்

ஆனால், அதே சூழ்நிலை ஏற்பட்ட போது க்ருனால் பண்டியா எச்சரிக்கை மட்டுமே விடுத்து சென்றது பெரும் வரவேற்பை பெற்றது. அதுவும் அஸ்வின் கேப்டனாக இருக்கும் பஞ்சாப் அணி பேட்ஸ்மேனுக்கு நடந்த இந்த நிகழ்வு, அஸ்வின் மேல் கோபத்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் சம்பவமாக இருந்தது.

செய்யவில்லை

செய்யவில்லை

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்த முடிந்தது. ஒருவேளை க்ருனால் பண்டியா, மாயங்க் அகர்வாலை ரன் அவுட் செய்திருந்தால், போட்டியின் திசை மாறி இருக்கவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதை செய்யவில்லை க்ருனால் பண்டியா.

Story first published: Saturday, March 30, 2019, 22:41 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
KXIP vs MI IPL 2019 : Krunal Pandya warn Mayank Agarwal for stepping out of crease
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X