For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை.. வங்கதேச கேப்டன் பரபர புகார்!

கொல்கத்தா : கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கவுள்ள பகலிரவு போட்டியில் விளையாடுவதற்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை என்று வங்கதேச அணியின் கேப்டன் மோமிநுல் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை போலவே வங்க தேசமும் தன்னுடைய முதலாவது பகலிரவு போட்டியை இன்று எதிர்கொள்ளவுள்ள நிலையில், முறையான பயிற்சியின்மை குறித்து யோசிக்காமல் மைதானத்தில் தங்களது சிறப்பான விளையாட்டை அளிப்போம் என்றும் மோமிநுல் தெரிவித்துள்ளார்.

முறையான பயிற்சியுடன் பகலிரவு போட்டியை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கோலி தெரிவித்துள்ள நிலையில் மோமிநுல்லும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் உமேஷ், ஷமி மற்றும் இஷாந்த் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை இந்த போட்டியில் எதிர்கொள்வது மிகுந்த சவாலான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 முறையான பயிற்சி வேண்டும்

முறையான பயிற்சி வேண்டும்

இந்தியா -வங்க தேச அணிகள் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தங்களது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளன. இந்நிலையில் போதிய பயிற்சியுடன் பகலிரவு போட்டியை துவங்கியிருக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

 சிறந்த பயிற்சி வேண்டும்

சிறந்த பயிற்சி வேண்டும்

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவேனும் முறையான பயிற்சிபெற இந்திய அணிக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.

 3 நொடிகளே கால அவகாசம்

3 நொடிகளே கால அவகாசம்

ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டிகளை விளையாட கடந்த ஆண்டு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுத்து நடத்தும் இந்த பகலிரவு போட்டி குறித்து தீர்மானிக்க தனக்கு 3 நொடிகளே கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் கோலி தெரிவித்திருந்தார்.

 போதிய பயிற்சி வேண்டும்

போதிய பயிற்சி வேண்டும்

இந்நிலையில் கோலியின் கருத்தை வங்கதேச அணியின் கேப்டன் மோமிநுல் ஹாக்கும் பிரதிபலித்துள்ளார். பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளை தங்களுடைய அணியும் முதல்முறையாக எதிர்கொள்ளவுள்ள நிலையில், போதிய பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 சமாளிப்பது சவாலான விஷயம்

சமாளிப்பது சவாலான விஷயம்

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா போன்றவர்களின் உலகத்தரமான பந்துவீச்சை விளக்குகளின் ஒளியில் எதிர்கொள்வது வங்கதேசத்திற்கு சவாலான விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 இந்தியாவுடன் விளையாடுவது சவால், மகிழ்ச்சி

இந்தியாவுடன் விளையாடுவது சவால், மகிழ்ச்சி

இந்தியா போன்ற உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள அணியுடன் விளையாடுவது மிகுந்த சவாலான மற்றும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகும் என்றும் மோமிநுல் தெரிவித்துள்ளார்.

 போட்டியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்

போட்டியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்

போதிய பயிற்சியின்மை, லைட் வெளிச்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்பது போன்ற சவால்கள் இருந்தாலும், அனைவரும் விருப்பத்துடன் காத்திருக்கும் இந்த பகலிரவு போட்டியை பிங்க் பந்துகளில் எதிர்கொள்ள வங்கதேச அணியும் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, November 22, 2019, 14:19 [IST]
Other articles published on Nov 22, 2019
English summary
Bangladesh Captain Mominul Haque says that Lack of Practice Ahead of D/N Test Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X