For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படி ஒரு சிக்ஸ், இப்படி ஒரு சிக்ஸ்.. மொத்த பாகிஸ்தானையும் தன் பக்கம் இழுத்த தமிழக வீரர்!

மும்பை : 2003-04இல் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

Recommended Video

Balaji was more famous than Imran Khan, recalls Ashish Nehra

அந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின், டிராவிட், முச்சதம் அடித்த சேவாக் ஆகியோரை விட அணியில் இடம் பெற்று இருந்த ஒரு தமிழக வீரர் தான் பிரபலமானவராக இருந்தார்.

அந்த தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி. அது குறித்து தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் அப்போது அணியில் இருந்த மூத்த வீரர் ஆஷிஷ் நெஹ்ரா.

லொஜக்... மொஜக்... பஜக்... மகளுக்கு பாக்சிங் கற்றுக் கொடுத்த வார்னர்லொஜக்... மொஜக்... பஜக்... மகளுக்கு பாக்சிங் கற்றுக் கொடுத்த வார்னர்

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

அப்போது கார்கில் போருக்கு பின் பல ஆண்டுகள் கழித்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதின. இந்திய அணி முதலில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகிர் கான் உள்ளிட்ட வேகப் பந்துவீச்சாளர்களுடன், லக்ஷ்மிபதி பாலாஜியும் இடம் பெற்றார்.

மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

அந்த சுற்றுப்பயணத்தில் வீரேந்தர் சேவாக் மறக்க முடியாத ஆட்டம் ஆடி டெஸ்ட் போட்டியில் தன் முதல் முச்சதம் அடித்தார். இந்தியர் ஒருவர் அடித்த முதல் முச்சதம் அதுதான். டிராவிட் 270 ரன்கள் குவித்தார். இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் சாதனை செய்து இருந்தார்.

பிரபலமாக இருந்த பாலாஜி

பிரபலமாக இருந்த பாலாஜி

ஆனால், அவர்கள் அனைவரையும் விட பிரபலமாக இருந்தார் பாலாஜி. அந்த தொடர் நடந்த போது பாகிஸ்தான் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர் பாலாஜி தான். அந்த தொடரில் பாலாஜி மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் சேர்த்து 7 விக்கெட் வீழ்த்தியதை தவிர வேறு பெரிய சாதனைகள் எதுவும் செய்யவில்லை.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அப்படி இருந்தும் அவர் பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக காரணம், ஒருநாள் போட்டியில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் தான். அந்த சுற்றுப் பயணத்தில் பாலாஜி மூன்று சிக்ஸர்கள் அடித்து இருந்தார். 3 டெஸ்ட்களில் 12 விக்கெட்களும், 5 ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அதைவிட அவரது சிக்ஸர்கள் தான் அவரை பிரபலம் ஆக்கியது.

நெஹ்ரா என்ன சொன்னார்?

நெஹ்ரா என்ன சொன்னார்?

இது பற்றி பேசிய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, அந்த சுற்றுப் பயணத்தில் தனக்கு நினைவில் இருக்கும் ஒரே விஷயம் லக்ஷ்மிபதி பாலாஜி மட்டும் தான் எனக் கூறி, எந்த அளவுக்கு பாலாஜி பாகிஸ்தானில் பிரபலமாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானை விட பிரபலம்

இம்ரான் கானை விட பிரபலம்

"உடை மாற்றும் அறையில் இர்பான் பதான் நிறைய கதைகள் கூறுவார். எனக்கு அந்த தொடரில் நினைவில் இருக்கும் ஒரே விஷயம் லக்ஷ்மிபதி பாலாஜி மட்டும் தான். அந்த சமயம், இம்ரான் கானை விட, பாலாஜி பாகிஸ்தானில் பிரபலமாக இருந்தார் என்றும் கூறலாம்." என்றார் நெஹ்ரா.

சிக்ஸ் அடித்தார்

சிக்ஸ் அடித்தார்

"அந்த ஆறு வாரமும் அவர் இடது, வலது, மத்தியில் என சிக்ஸர் அடித்துக் கொண்டே இருந்தார். சேவாக் முச்சதம், டிராவிட் இரட்டை சதம், இர்பான் பதானின் அபார செயல்பாடு என எல்லாம் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை களத்துக்கு வெளியே பாகிஸ்தானும், உடை மாற்றும் அறையில் பாலாஜியும் மட்டுமே இருந்தனர்.

7 விக்கெட்

7 விக்கெட்

ஒருநாள் தொடரில் சோயப் அக்தர் மற்றும் முகமது சமி பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து இருந்தார் பாலாஜி. அந்த தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாலாஜி 7 விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இந்தியா ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டையும் கைப்பற்றியது. அந்த தொடரில் தனக்கு கிடைத்த அளவுக்கு அதிகமான புகழ் தன்னை சங்கடத்துக்கு உள்ளாக்கியது என அதுபற்றி அடக்கமாக கூறி உள்ளார் பாலாஜி.

குறைந்த காலமே ஆடிய பாலாஜி

குறைந்த காலமே ஆடிய பாலாஜி

இந்திய அணியில் குறுகிய காலமே லக்ஷ்மிபதி பாலாஜி வாய்ப்பு பெற்றார். 8 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். டெஸ்டில் 27, ஒருநாள் போட்டிகளில் 34, டி20யில் 10 விக்கெட் வீழ்த்தி உள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் பாலாஜி.

Story first published: Sunday, April 19, 2020, 18:23 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Lakshmipathy Balaji was more popular in Pakistan during 2003-04 series. Even a triple century from Sehwag is not enough to turn away the attention.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X