For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல மாசு வார்னர்... சிட்னி போட்டியில பங்கேற்பாரா? பதற்றத்த்தில் கோச்!

மெல்போர்ன் : நாளை மறுதினம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

தனது காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் டேவிட் வார்னர் மெல்போர்னில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

குழந்தையை கூட பார்க்கல.. நடராஜனுக்கு ஒரு விதி.. கோலிக்கு ஒரு விதியா? கவாஸ்கர் பேச்சால் பரபரப்பு! குழந்தையை கூட பார்க்கல.. நடராஜனுக்கு ஒரு விதி.. கோலிக்கு ஒரு விதியா? கவாஸ்கர் பேச்சால் பரபரப்பு!

இந்நிலையில் சிட்னியில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்திற்குரியதாக உள்ளதால் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பதற்றத்தில் உள்ளார்.

2வது போட்டியில் நீக்கம்

2வது போட்டியில் நீக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மறுதினம் 2வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது காயம் இன்னும் முழுமையாக சரியாகாத நிலையில் அவர் 3வது போட்டியில் பங்கேற்பார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில், அவர் நேற்றைய பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவும் ஆனால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை என்று கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். அவர் விளையாடுவது அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகவும் தேவையான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில் லாங்கர்

நம்பிக்கையில் லாங்கர்

ஆனால் வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று தான் நம்புவதாகவும் அதற்கென பதற்றத்துடன் காத்திருப்பதாகவும் லாங்கர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டின் மீது அவருக்கு மிகப்பெரிய விருப்பம் உள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார்.

முழுமையாக குணமாகாத காயம்

முழுமையாக குணமாகாத காயம்

இநதியாவிற்கு எதிரான கடந்த ஒருநாள் தொடரின்போது வார்னருக்கு காயம் ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. மேலும் சிட்னியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா பரவல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைகள் காரணமாக அவர் உடனடியாக அணியில் இணைவதிலும் பிரச்சினை உள்ளது.

Story first published: Thursday, December 24, 2020, 10:32 [IST]
Other articles published on Dec 24, 2020
English summary
Fingers crossed he has slight touble when he starts running at full speed -Langer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X