For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புக்கை மூடுவார், ஸ்கோர் போர்டைப் பார்ப்பார், டென்ஷன் ஆவார்.. லாராவைப் போட்டுத் தாக்கும் கெய்ல்!

டெல்லி: 2005ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது நான் 317 ரன்களைக் குவித்ததை பிரையன் லாரா பெரும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்.

டென்ஷனுடன் காணப்பட்ட லாரா, அவ்வப்போது ஸ்கோர் போர்டை வந்து பார்த்துக் கொண்டிருந்தார். எங்கே நான் அவருடைய உலக சாதனையை முறியடித்து விடுவேனோ என்று அவருக்குள் பயம் இருந்தது என்றும் கெய்ல் கூறியுள்ளார்.

"Six Machine: I Don't Like Cricket...I Love It" என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதியுள்ளார் கெய்ல். அதில் பரபரப்பான, பல விறுவிறுப்பான சம்பவங்களையும் அவர் தொகுத்துக் கொடுத்துள்ளார். அதிலிருந்து சில...

சாதனைகள்தான் முக்கியம்

சாதனைகள்தான் முக்கியம்

சில வீரர்களுக்கு தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை அதிகம் இருக்கும். லாராவுக்கும் அப்படித்தான் இருந்தது. 2005 போட்டியில் லாரா 4 ரன்களில் அவுட்டாகி விட்டார். அவுட்டாகிப் போனதும் அவர் டிரஸ்ஸிங் ரூமுக்குப் போய் விட்டார். போய் புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டார்.

அவ்வப்போது பால்கனிக்கு வந்து

அவ்வப்போது பால்கனிக்கு வந்து

அப்போது நான் ஆடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது பால்கனிக்கு வந்து ஸ்கோர்போர்டைப் பார்ப்பார். பின்னர் உள்ளே போய் விடுவார். இதை ராம்நரேஷ் சர்வான் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவரது கவலை அப்படி

அவரது கவலை அப்படி

லாராவின் கவலை என்னவென்றால், எங்கே நான் அவரது சாதனையை மிஞ்சி விடுவேனோ என்பதாகும். இதனால் எனது ஸ்கோர் உயர உயர அவருக்கு கவலையும் ஏறிக் கொண்டிருந்தது.

எதுவும் பேசவில்லை

எதுவும் பேசவில்லை

நான் மதிய உணவு சாப்பிட வந்தபோது அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எனக்கு எந்த அட்வைஸும் தரவி்லை. எதையுமே சொல்லவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடு என்று கூட கூறவில்லை. நான் மீண்டும் விளையாடத் திரும்பியதும் வழக்கம் போல அவர் புக் படிப்பதும், ஸ்கோர் பார்ப்பதும், கவலைப்படுவதுமாக இருந்தார் என்று கூறியுள்ளார் கெய்ல்.

சாதனை முறியடிக்கப்படவில்லை

சாதனை முறியடிக்கப்படவில்லை

லாரா, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களைக் குவித்து வைத்திருந்தார். ஆனால் கெய்லால் அதை அப்போட்டியில் முறியடிக்க முடியவில்லை. 317 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல 2010ல் மீண்டும் ஒரு முச்சதம் போட்டார் கெய்ல். இம்முறை அவர் இலங்கைக்கு எதிராக 333 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

என் ஸ்டைல் இது

என் ஸ்டைல் இது

கெய்ல் மேலும் கூறுகையில் என்னை பலரும் முரட்டுத்தனம் மிக்கவன் என்று கூறுகிறார்கள். தேவையில்லாமல் அவுட் ஆவதாக சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. நான் நிறைய ஷாட் அடிக்கிறேன். சில நேரம் அவுட்டாகி விடுகிறேன். 40 ரன்களில் அவுட் ஆனால் என்ன, 4, ரன்களில் அவுட்டானால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.

நானும், பெண்களும்

நானும், பெண்களும்

பெண்களுக்கும், எனக்குமான உறவு வித்தியாசமானது அல்லு. என்னை அவர்கள் விரும்புகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன். நான் ஹாட்டானவன்தான். ஆனால் மோசமானவன் அல்ல. ஜமைக்காவில் இப்படித்தான். எல்லாவற்றிலும் நேர்மை இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை நான் நல்லவன்தான் என்று கூறியுள்ளார் கெய்ல்.

Story first published: Monday, June 13, 2016, 10:43 [IST]
Other articles published on Jun 13, 2016
English summary
Brian Lara looked worried and was on and on checking the scoreboard to see whether Chris Gayle during his innings of 317 against South Africa in 2005 was getting closer to his record, the latter claims in his autobiography.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X