For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெய்னா - சிஎஸ்கே மேட்டரை விடுங்க.. மும்பை இந்தியன்ஸ்-இல் இருந்து விலகினார் லசித் மலிங்கா!

அபுதாபி : லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுபவ வீரரான லசித் மலிங்கா இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் இழப்பாகும்.

சீனிவாசன் எனக்கு அப்பா மாதிரிங்க... அவர் தாராளமா திட்டலாம்.. ரெய்னா சூப்பர்!சீனிவாசன் எனக்கு அப்பா மாதிரிங்க... அவர் தாராளமா திட்டலாம்.. ரெய்னா சூப்பர்!

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதுவும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இன்னும் குறையாத நிலையில் நடைபெற உள்ளது. பிசிசிஐ அந்த தொடரை சிக்கலின்றி நடத்த கடும் விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

எட்டு ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ரெய்னா சிஎஸ்கே முகாமில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

சிஎஸ்கே - ரெய்னா

சிஎஸ்கே - ரெய்னா

சிஎஸ்கே - ரெய்னா இடையே மோதல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி, பின் எந்த பிரச்சனையும் இல்லை என ரெய்னா விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், மற்றொரு முக்கிய ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ்-க்கு அதிர்ச்சி அளித்துள்ளார் இலங்கையை சேர்ந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா.

வெற்றி நாயகன்

வெற்றி நாயகன்

லசித் மலிங்கா தான் 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவர் இந்த சீசனில் முதல் சில போட்டிகளில் ஆட மாட்டார் என முன்பு கூறப்பட்டு இருந்தது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதால் அவர் அதுவரை இலங்கையில் இருந்து விட்டு பின் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார் என கூறப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது தன் குடும்பத்தினருடனே இருக்க மலிங்கா முடிவு செய்துள்ளார்.

புதிய வீரர்

புதிய வீரர்

2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார் லசித் மலிங்கா. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியின் தூண்

அணியின் தூண்

லசித் மலிங்கா தான் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குறித்து பேசி உள்ள அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, லசித் ஒரு ஜாம்பவான், எங்கள் அணியின் வலிமையின் தூண் என பாராட்டி உள்ளார்.

ஜேம்ஸ் பாட்டின்சன் இணைவார்

ஜேம்ஸ் பாட்டின்சன் இணைவார்

புதிதாக அணியில் சேர்ந்துள்ள ஜேம்ஸ் பாட்டின்சன் ஐக்கிய அரபு அமீரக சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் அணியின் வேகப் பந்துவீச்சை திட்டமிட சரியான வீரர் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஆகாஷ் அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி செய்ய துவங்கி உள்ள நிலையில், பாட்டின்சன் விரைவில் மும்பை அணியின் பயிற்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 2, 2020, 19:38 [IST]
Other articles published on Sep 2, 2020
English summary
Lasith Malinga not to play for Mumbai Indians in IPL 2020. He decided to withdraw to stay with his family as his father is seriously ill and to undergo a surgery.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X