For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

32 ஆண்டுகளில் 3வது முறை... சொதப்பிய ஆஸ்திரேலியா... சாதித்த இந்திய இளம் வீரர்கள்!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது.

போட்டியின் 2 இன்னிங்சிலும் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி! ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!

காப்பாவில் விளையாடப்பட்டுள்ள போட்டிகளில் கடந்த 32 ஆண்டுகளில் 2 இன்னிங்சிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸி.

அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதிப்போட்டி காப்பாவில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு இன்னிங்சிலும் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிற்கு 327 ரன்களை இலக்காக அளித்துள்ளது. தற்போது தனது 2வது இன்னிங்சை இந்தியா ஆடி வருகிறது.

2வது இன்னிங்ஸ் 294 ரன்கள்

2வது இன்னிங்ஸ் 294 ரன்கள்

காப்பாவில் விளையாடப்பட்ட இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களும் அதேபோல இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களும் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

அனைத்து விக்கெட்டுகள் அவுட்

அனைத்து விக்கெட்டுகள் அவுட்

இந்நிலையில் காப்பாவில் கடந்த 32 ஆண்டுகளில் இரண்டு இன்னிங்சிலும் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்துள்ளது இது மூன்றாவது முறை. காப்பா ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் ஃபேவரான களமாக உள்ள நிலையில், இரண்டு இன்னிங்சையும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளதற்கு இந்திய இளம் அணி காரணமாக அமைந்துள்ளது. காயம் காரணமாக இந்த அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் ஆகியோர் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகளில் ஆல்-அவுட்

3 போட்டிகளில் ஆல்-அவுட்

காப்பாவில் கடந்த 32 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள 32 போட்டிகளில் கடந்த 1992-93ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 இன்னிங்சிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி, இதேபோல கடந்த 2008-09ம் ஆண்டில் அனைத்து விக்கெட்டுகளையும் 2 இன்னிங்சிலும் இழந்து ஆடியது. தற்போது இந்தியாவிற்கு எதிராக 3வது முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் இரண்டு இன்னிங்சிலும் இழந்துள்ளது.

Story first published: Monday, January 18, 2021, 15:52 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
Third time in 32 years Australia have been bowled out in each innings of Test at the Gabba
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X