For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Virat Kohli : இதற்கு மேல என்ன செய்றது..? அழாத குறையாக கதறும் கோலி

பெங்களூரு:கொல்கத்தாவுக்கு எதிராக 205 ரன்கள் அடித்த போதும் தோல்வி அடைந்துவிட்டோம் என்றால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று விராட் கோலி புலம்பி தள்ளியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17வது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா.

அதன் பின்னர் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

இவர் பேரை சொன்னாலே கதிகலங்கும் எதிரணிகள்.. 2019 ஐபிஎல் நாயகனாக மாறிய இவர் பேரை சொன்னாலே கதிகலங்கும் எதிரணிகள்.. 2019 ஐபிஎல் நாயகனாக மாறிய "காட்டடி மன்னன்" ரஸ்ஸல்!

வென்றது கொல்கத்தா

வென்றது கொல்கத்தா

206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரசல் 48 ரன்களும் அடித்தனர்.

தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றம்

ரசல் என்ற தனி ஒருவரின் ஆட்டத்தால் பெங்களூரு அணியின் வெற்றியே ஒட்டு மொத்தமாக பறிபோய் விட்டது. 17 ஓவர்கள் பெங்களூரு அணியிடம் இருந்த ஆட்டம் அப்படியே மாறி போனது.

ஒன்றும் தெரியவில்லை

ஒன்றும் தெரியவில்லை

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் கோலி கூறியதாவது: எங்கு தோற்றோம் என்றே தெரியவில்லை. கடைசி 4 ஓவர்கள் பந்துவீசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிக ரன்கள் தேவை

அதிக ரன்கள் தேவை

சிறந்த, ஆட்ட நுணுக்கம் தெரிந்த ஒரு பந்துவீச்சாளர் இதுபோன்ற சூழலுக்கு ரொம்ப தேவை. வெற்றிக்கான இலக்கு என்று தான் நான் நினைத்தேன். ஆனால், ரசல் போன்ற வீரர்கள் இருக்கும் போது இது போதாது. கூடுதலாக 25 ரன்கள் குவித்திருக்க வேண்டும்.

அணியுடன் பேசவில்லை

அணியுடன் பேசவில்லை

அணியின் தோல்வி குறித்து சக வீரர்களுடன் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்களை வைத்து கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இதில் சொல்ல ஒன்றுமில்லை.

மாறும் என நம்பிக்கை

மாறும் என நம்பிக்கை

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே ஏமாற்றம் தான் எங்களுக்கு. இதை அணி வீரர்களிடம் சொல்லி கஷ்டப்படுத்த விரும்பவில்லை. விரைவில் எங்களது நிலைமை மாறும் என்று நம்புகிறோம் என்று கோலி கூறினார்.

Story first published: Saturday, April 6, 2019, 11:18 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
The last 4 overs we bowled was just unacceptable says Virat Kohli after kkr match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X