For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர்கிட்ட இருந்து இளைஞர்கள் கத்துக்கனும்...கொஞ்சம் கூட பொறுமையை இழக்கல...யாரை பாராட்டுகிறார் லஷ்மண்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவிடம் இருந்து இளைஞர்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என விவிஎஸ்.லஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் இந்திய அணியில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்பு இடம்பிடித்த சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் வீரர் விவிஎஸ்.லஷ்மண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இஷாந்த் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் தேவட்டியா ஆகியோருக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் போராட்டம்

நீண்ட நாள் போராட்டம்

இதில் இஷாந்த் கிஷான் மற்றும் தேவட்டியா ஆகியோருக்கு கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவ் 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் மட்டும் 480 ரன்கள் குவித்தார். எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக ரசிகர்கள் பலர் விராட் கோலியையும் இந்திய தேர்வர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

முன்னுதாரணம்

முன்னுதாரணம்

இதுகுறித்து பேசியுள்ள லஷ்மண் , இந்திய இளைஞர்களுக்கு சூர்யகுமார் யாதவ் ஒரு முன்னுதாரணம். தற்போதை இளைஞர்கள் வெகு சீக்கிரமாக பொறுமையை இழக்கிறார்கள். முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடும் அனைவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது. பொறுத்திருக்க வேண்டும்.

வாய்ப்பு

வாய்ப்பு

சூர்யகுமார் அதிகப்படியான தகுதிகள் உள்ளன. ஆனால் அவர் பொறுமையாக காத்திருந்து முதல் தர போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட சிறப்பான பங்கை அளித்தார். என் பயிற்சியாளர் என்னிடம், வாய்ப்புக்கான கதவு திறக்கவில்லை என்றால் ஆட்டத்தின் மூலம் கதவை உடைத்து உள்ளே செல்ல வேண்டும் என கூறுவார். சூர்யகுமார் யாதவ் அதை செய்துள்ளார். அவர் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா தெரியவில்லை, ஆனால் இந்திய அணிக்கு தகுதியானவர் என லஷ்மண் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 14:39 [IST]
Other articles published on Mar 9, 2021
English summary
Laxman about Suryakumar yadhav Got a spot in team india's T20 squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X