For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த ஒரே தவறு தொடர்ந்து நடக்கிறது” ​இந்திய அணியில் உள்ள முக்கிய குறைபாடு.. எடுத்துக்கூறிய லக்‌ஷ்மண்

மும்பை: இந்திய அணியில் மிகப்பெரிய குறைபாடு ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் உதாரணத்துடன் கூறியுள்ளார்.

இந்திய அணி இந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதலில் இந்த தொடர் வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் தாக்கத்தால் டிசம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மெர்சலான வீரர்களை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா- இந்திய தொடருக்கான அணி அறிவிப்புமெர்சலான வீரர்களை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா- இந்திய தொடருக்கான அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என வரிசையாக உலகின் முன்னணி அணிகளை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்த முனைப்புடன் உள்ளது. இதனால் அணியில் உள்ள குறைபாடுகள் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறைபாடு கூறிய லக்ஷ்மண்

குறைபாடு கூறிய லக்ஷ்மண்

இந்நிலையில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் குறைபாடு உள்ளதாக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் நிதானமாக செட்டில் ஆகும் வீரர்கள், அதனை பெரிய ஸ்கோராக எடுத்துச்செல்லாமல் மோசமாக விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். உதாரணத்திற்கு கான்பூர் டெஸ்டில் ரகானே, புஜாரா அவுட்டானது, மற்றும் சுப்மன் கில் மும்பை டெஸ்டில் நன்கு விளையாடி செட்டில் ஆன பிறகு விக்கெட்டை இழந்தார்.

தொடரும் தவறுகள்

தொடரும் தவறுகள்

இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. நல்ல தொடக்கத்தை கொடுக்கும் வீரர்கள் முடித்து தருவது தான் அணிக்கு நல்லது. இல்லையென்றால் விளைவுகளை தரும். இந்திய அணியில் தற்போது 5 டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதன்பிறகு சிறப்பான ஃபார்மில் ஆல்ரவுண்டர் ஜடேஜா உள்ளார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உள்ளார்.

Recommended Video

BCCI vs Dravid இடையே கருத்து வேறுபாடு? அணித்தேர்வில் குழப்பம்| Oneindia Tamil
புரிந்துக்கொள்ளுங்கள்

புரிந்துக்கொள்ளுங்கள்

எனவே டாப் ஆர்டரில் இருக்கும் 5 பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆகி சிறிது நேரம் களத்தில் இருந்துவிட்டால், அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவது முக்கியம். அப்போது தான் தென்னாப்பிரிக்கா போன்ற அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவது சுலபமாக இருக்கும். இதனை மனதில் வைத்து இந்திய பேட்டிங் ஆர்டர் சிறப்பாக ஆட வேண்டும்.

Story first published: Wednesday, December 8, 2021, 16:30 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Laxman points out Team India's major batting issue to change ahead of SA Test series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X