For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்ளோ போராடியும் ப்ளேயிங் 11-ல வாய்ப்பு இல்லையா....பாவம்பா சூர்யகுமார் யாதவ்...லஷ்மணின் கணிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எதுவாக இருக்கும் என குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 12ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் லஷ்மண் கணித்துள்ளார். ஆனால் அதில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு புறம் அனுபவ வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்க, மற்றொரு புறம் ஃபுல் ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்கள் இருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்நிலையில் முன்னாள் வீரர் முதல் டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11க்காக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்குமார், தீபக் சஹார், யுவேந்திர சாஹர், டி. நடராஜன் ஆகிய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

யாதவுக்கு இடமில்லை

யாதவுக்கு இடமில்லை

சூர்யகுமார் யாதவுக்கு முதல்முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் அவர், 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் மட்டும் 480 ரன்கள் குவித்தார். எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக ரசிகர்கள் பலர் விராட் கோலியையும் இந்திய தேர்வர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

தற்போது அணியில் வாய்ப்பு கிடைத்த போதிலும், லஷ்மணின் ப்ளேயிங் 11ல் அவர் இடம்பெறவில்லை.

தவான்

தவான்

இந்திய அணியில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடக்கூடியவர் தவானா, கே.எல்.ராகுலா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தொடக்க வீரருக்கான இடத்திற்கு கே.எல்.ராகுலை லஷ்மண் தேர்வு செய்துள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல ஷிகர் தவானும் விஜய் ஹாசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தவர் தான். எனினும் யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்திற்கு கடினமாக இருக்கலாம்.

Story first published: Wednesday, March 10, 2021, 19:02 [IST]
Other articles published on Mar 10, 2021
English summary
Laxman's prediction on India’s Playing 11 for first t20 against England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X