மீண்டும் கேப்டனாகும் கங்குலி.. லேஜண்ட்ஸ் கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு.. யார் பங்கேற்கிறார்கள் ?

கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி, தற்போது மீண்டும் மைதானத்துக்கு கேப்டனாக திரும்புகிறார்.

லேஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி ஒரு சிறப்பு அட்டம் நடைபெறுகிறது. ,இதில் இந்திய மகாராஜா அணியும். உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

சேவாக்

சேவாக்

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கெயிப்பும் இந்திய மகராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

இர்பான் பதான்

இர்பான் பதான்

இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர். பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.

ரவி சாஸ்த்ரி

ரவி சாஸ்த்ரி

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, ஓஜா அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்தி வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்த்ரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்த்ரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.

உலக ஜெயிண்ட்ஸ் அணி

உலக ஜெயிண்ட்ஸ் அணி

இயன் மார்கன், சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Legends League cricket 2nd Edition – Sourav Ganguly named captain for Indian Team மீண்டும் கேப்டனாகும் கங்குலி.. லேஜண்ட்ஸ் கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு.. யார் பங்கேற்கிறார்கள் ?
Story first published: Friday, August 12, 2022, 13:35 [IST]
Other articles published on Aug 12, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X