For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளாஷ்பேக்: 2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் வீரர்கள்

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை டிசம்பர் 4 அன்று அறிவித்துள்ளார்.

2018-இன் இறுதியில் வந்துள்ள இந்த அறிவிப்பு, இந்த ஆண்டில் ஓய்வு பெற்ற முக்கிய கிரிக்கெட் வீரர்களை நினைவுகூர வைத்தது.

ஏராளமான வீரர்கள் 2018இல் தங்கள் ஓய்வை அறிவித்து இருந்தாலும், கிரிக்கெட் உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய ஓய்வு அறிவிப்புகளை பற்றி பார்ப்போம்.

அலஸ்டர் குக் ஓய்வு

அலஸ்டர் குக் ஓய்வு

இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் சரியாக ஆடாத அலஸ்டர் குக், ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தன் கடைசி போட்டியில் திடீரென ஃபார்முக்கு திரும்பிய குக் அதிரடியாக ஒரு அரைசதம், ஒரு சதம் அடித்து தன் கடைசி போட்டியை மிகச் சிறப்பான ஒன்றாக மாற்றிக் காட்டினர். அலஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 12,472 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்தின் மிகச் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்கினார் குக்.

ரங்கனா ஹெராத் ஓய்வு

ரங்கனா ஹெராத் ஓய்வு

இலங்கையின் ரங்கனா ஹெராத் 93 டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் ஓய்வு பெற்றார். முரளிதரன் இலங்கை அணியின் முக்கிய வீரராக இருந்த போது அவ்வப்போது அணியில் வாய்ப்பு பெற்று வந்தார் ஹெராத். முரளிதரன் ஓய்வு பெற்ற பின் இலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக மாறிய ஹெராத் அதன் பின் பட்டையைக் கிளப்பினார். 170 இன்னிங்க்ஸ்களில் 433 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ஹெராத் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்கள் மத்தியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியதில் முரளிதரன், வார்னே, அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து நான்காவதாக இடம் பிடித்தவர் ஹெராத்.

ஏபி டி வில்லியர்ஸ் அதிர்ச்சி ஓய்வு

ஏபி டி வில்லியர்ஸ் அதிர்ச்சி ஓய்வு

ஏபி டி வில்லியர்ஸ் யாரும் எதிர்பாராத நிலையில் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். நட்சத்திர வீரராக வலம் வந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். தன் நாடு, ரசிகர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் மற்றும் தன் தானே மீது வைத்து இருக்கும் எதிர்பார்ப்பு தரும் அழுத்தத்துக்கு ஏற்ப தன்னால் ஆட முடியவில்லை என்ற காரணத்தால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி வில்லியர்ஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 50க்கும் மேலே சராசரி வைத்து இருந்த மிக சில பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

மறக்க முடியாத கௌதம் கம்பீர்

மறக்க முடியாத கௌதம் கம்பீர்

கம்பீர் நீண்ட காலமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தன் ஃபார்மை பல முறை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்தும், கம்பீரை அவரது கோபமான குணத்தால் ஒதுக்கி வைத்து இருந்தனர் தேர்வாளர்கள். எனினும், ஐபிஎல் தொடர், ரஞ்சி தொடர் ஆகியவற்றில் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வந்தவர், கடந்த ஐபிஎல் தொடரில் பெரும் சறுக்கலை சந்தித்தார். தற்போது தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் கம்பீர். 2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் 75 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த கம்பீர், 2011 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

Story first published: Wednesday, December 5, 2018, 10:02 [IST]
Other articles published on Dec 5, 2018
English summary
Here is notable Cricket players retired in 2018 - Alastair cook, Ab De Villiers, Ranagna Herath, Gautam Gambhir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X