For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பையில் இடம் வேண்டுமா..? 3 இந்திய வீரர்களுக்கு அக்னி பரிட்சை.. IND vs SA தொடரில் சோதனை

மும்பை: வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் , 3 வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது

நடப்பாண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு துயாராகும் வகையில் நடைபெறும் இருத்தரப்பு டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொடக்கமே சோதனையா?? தென்னாப்பிரிக்க டி20 தொடர்.. இந்திய அணிக்குள் 3 முக்கிய பிரச்சினைகள்- விவரம் தொடக்கமே சோதனையா?? தென்னாப்பிரிக்க டி20 தொடர்.. இந்திய அணிக்குள் 3 முக்கிய பிரச்சினைகள்- விவரம்

ஆர்ஷ்தீப் சிங்

ஆர்ஷ்தீப் சிங்

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் கட்டுகோப்பாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணறடித்தார் ஆர்ஷ்தீப் சிங். அதுவும் போட்டியின் முக்கிய கட்டமான 16 ஓவரிலிருந்து 20வது ஓவர் வரை நடப்பு சீசனில் ஆர்ஷ்தீப் சிங் மொத்தமே 11 பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் மட்டுமே விட்டு கொடுத்துள்ளார். இதனால் ஆர்ஷ்தீப் சிங், தென்னாப்பிரிக்க தொடரிலும் கலக்கினால் உலக கோப்பைக்கான டிக்கெட் நிச்சயம்.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

நடப்பு ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற உம்ரான் மாலிக் 14 போட்டியில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறையாமல் பந்தவீசும் உம்ரான் மாலிக், ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளத்திற்கு ஏற்ற வீரர். ஆனால் அதற்கு முதலில் தென்னாப்பிரிக்க தொடரில் கிடைக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

நடப்பு ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் 14 போட்டியில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் சிறப்பாக பந்தவீசினாலும், தொடர் முடிவில், அவரது பந்தவீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்க தொடங்கிவிட்டனர். டி20 உலககோப்பை அணியில் சாஹல், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் டி20 உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் குல்தீப் தனது மாயஜால பந்துவீச்சை தென்னாப்பிரிக்க தொடரில் வெளிப்படுத்த வேண்டும்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் தொடரில் கலக்கியதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைத்துள்ளது. 14 போட்டியில் 330 ரன்களை அடித்துள்ள தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் ரேட்டையும் 183 என்ற நிலையில் வைத்துள்ளார். இந்திய அணியிலும் ஃபினிஷர் ரோலுக்கு கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் கார்த்திக் அதே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலககோப்பையில் அவரது இடம் உறுதி.

Story first published: Friday, June 3, 2022, 11:51 [IST]
Other articles published on Jun 3, 2022
English summary
List of 4 Players who facing litmus test in Ind vs SA t20 series வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியா Vs தென்னாப்பிரிக்கா தொடர் , 3 வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X