For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2021ல் அதிக வருமானம்.. கொட்டும் பண மழை.. டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட் இதோ

மும்பை: 2021ல் அதிகம் வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் யார் யாரென்று இதில் பார்க்கலாம்.

கால்பந்து, டென்னிஸ் போன்றவற்றை ஒப்பிடுகையில், கிரிக்கெட்டின் மவுசு மற்றும் வர்த்தகம் உலகளவில் குறைவு என்றாலும், ஆசிய கண்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட் தான் டாப்.

ஒலிம்பிக் போட்டியில்.. ஒவ்வொரு வீரருக்கும் 55 காண்டம்கள்.. அதிக அளவு உடலுறவு.. என்ன காரணம்?ஒலிம்பிக் போட்டியில்.. ஒவ்வொரு வீரருக்கும் 55 காண்டம்கள்.. அதிக அளவு உடலுறவு.. என்ன காரணம்?

நமது இந்தியாவை பற்றி சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களின் கனவு நாயகர்களாக வலம் வருகின்றனர். அப்படிப்பட்ட ஹீரோக்களில் இந்தாண்டு அதிகம் வருமானம் ஈட்டும் வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

"சின்னத் தல" என்று அன்போடு தமிழக ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கும் ரெய்னாவின் ஆண்டு வருமானம் 22.34 கோடி. 9வது இடத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 22.40 கோடியாம்.

5ம் இடத்தில் பாண்ட்யா

5ம் இடத்தில் பாண்ட்யா

பட்டியலில் 8வது இடத்தில் மிஸ்டர்.360 டிகிரி டி வில்லியர்ஸ் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம், 22.50 கோடி. 7வது இடத்தில் இருப்பது நம்ம ஜஸ்ப்ரித் பும்ரா. இவரது ஆண்டு வருமானம், 31.65 கோடியாகும். 6வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம், ரூ.55.86 கோடியாம். அதேபோல், 5வது இடத்தில் நம்ம ஹர்திக் பாண்ட்யா இருக்கிறாரா. இவரது ஆண்டு வருமானம் 59.59 கோடி என தெரிகிறது.

தோனி

தோனி

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வருடத்திற்கு ரூ.60 கோடி வருமானத்துடன் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில், இந்திய அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மா, வருடத்திற்கு 74.49 கோடி வருமானம் ஈட்டுகிறாராம். 2வது இடத்தில் இருப்பது யார் தெரியுமா? "தல" தோனி. இவரது வருட சம்பளம், ரூ.108.28 கோடி. சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி, தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

Recommended Video

IPLம் ஒரு காரணம்! The Hundredலிருந்து விலகிய Players! Williamson, Warner Pulled out | OneIndia Tamil
சாட்சாத் கோலி தான்

சாட்சாத் கோலி தான்

அப்போ முதல் இடம் யாரென்று நீங்களே கண்டுபிடித்து இருப்பீர்கள். யெஸ்.. கேப்டன் விராட் கோலியே தான். இவரது ஆண்டு வருமானம், 208.56 கோடியாம். அடேங்கப்பா. அப்போ ஒரு 5 வருஷத்துக்கு கணக்குப் பண்ணி பார்த்தா, தலே சுத்துது-ல சனா! நாம் கொண்டாடும் கிரிக்கெட் வீரர்களின் வருமானம் இப்படி அடை மழை மாதிரி கொட்டிக் கொண்டிருக்க, அதைப் பார்க்கும் ரசிகனின் வருமானமும், இந்த கொரோனா கோலத்தையும் மீறி சிறப்பாக இருந்தால் நல்லது.

Story first published: Monday, July 12, 2021, 15:51 [IST]
Other articles published on Jul 12, 2021
English summary
List of Top 10 Highest Paid Cricketers 2021 - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X