For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கைகள் நன்கு சிக்கியிருந்தது.. ” ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் கடைசி நிமிடம்.. காப்பாற்ற முயன்றவர் உருக்கம்!

மும்பை: ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது கடைசி நிமிடங்களில் போராடியது குறித்து அவரை காப்பாற்ற முயன்றவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

46 வயதே ஆகும் சைமண்ட்ஸ் திடீரென உயிரிழந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

ஐபிஎல்-ஐ சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து சதி.. 3 பேரை கைது செய்த சிபிஐ.. சிக்கும் முக்கிய தலைகள்? ஐபிஎல்-ஐ சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து சதி.. 3 பேரை கைது செய்த சிபிஐ.. சிக்கும் முக்கிய தலைகள்?

இந்திய நேரப்படி நேற்று முன் தினம் மாலை 7 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

 விபத்து எப்படி நிகழ்ந்தது

விபத்து எப்படி நிகழ்ந்தது

இந்திய நேரப்படி நேற்று முன் தினம் மாலை 7 மணியளவில் விபத்து நடந்துள்ளது. டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் இருந்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காரில் சென்றுக்கொண்டிருந்தார். ஆலிஸ் ஆற்றுப்பாலத்தில் சென்றக்கொண்டிருந்த போது, பாலம் முடிந்ததும் சாலை இடது பக்கம் திரும்பியுள்ளது.

விபத்திற்கான காரணம்

விபத்திற்கான காரணம்

ஆனால் அதிவேகமாக சென்ற சைமண்ட்ஸின் கார், கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, சாலையில் மேலும், கீழும் புரண்டு போய் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வெளியான முக்கிய தகவல்

வெளியான முக்கிய தகவல்

இந்நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்றவர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கார் விபத்து சத்தம் கேட்டது, அப்பகுதியை சேர்ந்த வேலான் டௌன்சன் தான் சென்று பார்த்துள்ளார். சைமண்ட்ஸ் காரில் இருந்து வெளியில் வரமுடியாத வகையில் நன்கு சிக்கியிருந்துள்ளார். அவரால் வாயை திறந்து பேசக்கூட முடியாத நிலையில் இருந்துள்ளார்.

கடைசி நிமிட போராட்டம்

கடைசி நிமிட போராட்டம்

இதுகுறித்து பேசிய அந்த உள்ளூர்வாசி, சைமண்ட்ஸ் நன்கு சிக்கியிருந்தார். அவரை வெளியில் இழுக்க கடுமையாக முயன்றேன். அதன் பின்னர் CPR எனப்படும் முதலுதவியை அளித்து அவரின் உயிர்நாடியை சோதனை செய்தேன். ஆனால் சைமண்ட்ஸிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவரின் உயிர் பிரிந்துவிட்டது. கடைசி நேரத்தில் கடுமையாக முயற்சி செய்தோம், கண்முன்னே உயிர் பிரிந்து சென்றதாக அவர் பதிவு செய்துள்ளார்.

Story first published: Monday, May 16, 2022, 13:02 [IST]
Other articles published on May 16, 2022
English summary
Andrew symonds last minutes ( ஆண்ட்ரூ சைமண்ட்ஸுன் கடைசி நிமிடங்கள் ) ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் கடைசி நிமிடங்களை சம்பவ இடத்தில் இருந்த நபர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X