For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாக்டவுன்லதான் தெரிஞ்சுது நான் கிரிக்கெட்டை எவ்வளவு லவ் பண்றேன்னு.. பும்ரா நெகிழ்ச்சி

துபாய் : லாக் டவுன் காலத்தில்தான் தான் கிரிக்கெட்டை எவ்வளவு தூரம் விரும்புகிறேன் என்பது தனக்கு புரியவந்ததாக இந்திய மற்றும் மும்பை இநதியன்ஸ் அணியின் முக்கிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.

லாக் டவுன் வாழ்க்கை தனக்கு எந்தவித நெருக்கடியையும் தரவில்லை என்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய அம்மாவின் கைகளால் சமைக்கப்பட்ட உணவை தான் என்ஜாய் செய்து சாப்பிட்டதாகவும் பும்ரா கூறினார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜஸ்பிரீத் பும்ரா, துபாயில் நடைபெற்றுவரும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார்.

புயலுக்கு முன்னே அமைதி... ஐபிஎல்லுக்காக ரிலாக்சாக காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா புயலுக்கு முன்னே அமைதி... ஐபிஎல்லுக்காக ரிலாக்சாக காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

19ம் தேதி துவக்கம்

19ம் தேதி துவக்கம்

ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் கடந்த 2018ல் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அதன்பிறது அவருக்கு தொட்டதெல்லாம் துலங்கி வருகிறது. இந்திய அணியின் முக்கிய பௌலராக உள்ளார் பும்ரா.

லாக்டவுன் காலம் புரியவைத்தது

லாக்டவுன் காலம் புரியவைத்தது

ஐபில்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடவுள்ள பும்ரா, அதற்கான பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறார். பயிற்சி போட்டிகளுக்கு இடையில் பேசிய அவர், இந்த 5 மாதகால லாக் டவுன் தான் கிரிக்கெட்டை எவ்வளவு விரும்புகிறேன் என்ற புரிதலை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதிகளவில் பாதிக்கவில்லை

அதிகளவில் பாதிக்கவில்லை

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கினாலும் அதனால் தான் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றும் புதிதாக தான் குடியேறியுள்ள வீட்டில் தன்னுடைய அம்மாவின் கைகளால் சமைத்து சாப்பிட்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்போதும் தனிமையையே விரும்புவேன் என்றும் இந்த லாக்டவுன் அதை தனக்கு சிறப்பாக செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

டி20 போட்டிகளில் விளையாடுவது எளிது

டி20 போட்டிகளில் விளையாடுவது எளிது

இந்த இடைவெளிக்கு பிறகு உடனடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் சிரமமானது என்றும் டி20 போட்டிகளை விளையாடுவது எளிதானது என்றும் அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு நாளில் 18 முதல் 20 ஓவர்களை போட வேண்டியதால், அதற்கேற்ப பயிற்சி போட்டிகளிலும் ஒருநாளில் குறைந்தபட்சம் 15 ஓவர்களை போட வேண்டியது அவசியம். அதனால் காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் பும்ரா கூறினார்.

Story first published: Thursday, September 10, 2020, 20:36 [IST]
Other articles published on Sep 10, 2020
English summary
Returning to the T20 format will be relatively easier than returning to play the Tests immediately -Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X