For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்து வந்து போன மழை.. ஆண்டர்சனின் ஆக்ரோஷ பந்து வீச்சு.. லார்ட்ஸ் டெஸ்ட்.. 2ம் நாள் ஹைலைட்ஸ்!

லார்ட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் லார்ட்ஸில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக முதல் நாள் போட்டி நடைபெறாத நிலையில் நேற்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இதோ:

lords test


1 வந்து வந்து போன மழை

முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் மழை இரு அணி வீரர்களுக்கும் அவ்வப்போது தொல்லை கொடுத்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக மழை நின்ற பின் போட்டியை ஆரம்பித்தனர். 6.3 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் மீண்டும் மழை. அப்போது ஸ்கோர் 11/2. அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தனர். அடுத்த சில ஓவர்களில் மீண்டும் மழை. ஆனால் அப்போது இந்திய தனது முக்கிய விக்கெட்டான புஜாராவை இழந்தது.அப்போது ஸ்கோர் 15/3. அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2 தொடர்ந்து சொதப்பும் ஓப்பனிங் பேட்டிங்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நேற்று மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் அணியில் இடம்பெறாத நிலையில் விஜய் மற்றும் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் விஜய் டக் அவுட் ஆனார். ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3 புஜாராவின் ரன் அவுட்

இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டிருந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கில் புஜாரா மீண்டும் ஒரு முறை ரன் அவுட் ஆனார். விராட் கோஹ்லி செய்த தவறால் இந்த முறை புஜாரா ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.ஆட்டத்தின் போக்கை இங்கிலாந்து வசம் மாற்றிய நிகழ்வும் இதுவே. புஜாரா இந்திய அணியின் கடைசி 8 ரன் அவுட் நிகழ்வுகளில் 6 முறை தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

ஆண்டர்சன் வீழ்த்திய 5 விக்கெட்கள்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அவர் இதுவரை 99* விக்கெட்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 அஸ்வின் மட்டுமே அதிக ரன்கள்

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே நேற்றைய போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். அவர் அதிகபட்சமாக 29 ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்த படியாக விராட் கோஹ்லி 23 ரன்களை எடுத்தார்.










Story first published: Saturday, August 11, 2018, 10:15 [IST]
Other articles published on Aug 11, 2018
English summary
Anderson bags 5 wickets and india struggling in Lords
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X