For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 ரன்கள்.. 7 விக்கெட்டுகள்.. சரணடைந்த டெல்லி.. எப்படி? அந்த 20 நிமிடங்கள்.. நடந்தது என்ன?

Recommended Video

IPL 2019: Delhi Vs Punjab: மொத்தமாக சரணடைந்த டெல்லி, நடந்தது என்ன?- வீடியோ

சண்டிகர் : 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து.... வெற்றியை தாரை வார்த்தது எப்படி என்று தெரியாமல் இன்னும் டெல்லி அணி புலம்பிக் கொண்டு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் மன்கட் முறை எவ்வளவு மறக்க முடியாதோ.. அதுபோன்று டெல்லி அணிக்கு நேற்றைய ஆட்டம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது எனலாம். ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை இதுபோன்று யாரும் கோட்டை விட்டிருக்க முடியாது.

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்பது எளிய இலக்குதான் என்றே சொல்லலாம். அதே எண்ணத்தில் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரித்வி ஷா, அஸ்வின் வீசிய முதல் பந்திலிலேயே விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், தவானுடன் சேர்ந்தார்.

என்னத்த சொல்றது... நான் ஊமையாகிவிட்டேன்.. நொந்து நூடுல்ஸ் ஆன அந்த இளம் கேப்டன் என்னத்த சொல்றது... நான் ஊமையாகிவிட்டேன்.. நொந்து நூடுல்ஸ் ஆன அந்த இளம் கேப்டன்

8 ஓவரில் 49 ரன்கள்

8 ஓவரில் 49 ரன்கள்

இருவரும் நிதானமாக ஆட, பவர்ப்ளே ஓவரில் 49 ரன்களை எடுத்தது டெல்லி அணி. 8வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேற, அடுத்த சில ஓவரில் தவானும் பெவிலியன் திரும்பினார்.

சரிவில் இருந்து மீட்டனர்

சரிவில் இருந்து மீட்டனர்

82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என டெல்லி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப்பந்த், இங்ராம் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் களத்தில் நிலைத்ததால், அணியின் வெற்றி உறுதி என்று தான் அனைவரும் நம்பினர்.

17வது ஓவர்

17வது ஓவர்

ஆனால்... களத்தில் நடந்ததோ வேறு. முகமது சமி வீசிய 17வது ஓவர் தான் ஒட்டுமொத்த போட்டியின் திருப்புமுனை என்றே சொல்லலாம். அப்போது களத்தில் இருந்தது ரிஷப் பண்ட். 39 ரன்கள் சேர்த்த நிலையில் 4வது பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

உடைந்த பார்ட்னர்ஷிப்

உடைந்த பார்ட்னர்ஷிப்

4வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்தனர். இதுதான் டெல்லி அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். அடுத்து மோரிஸ் களமிறங்கினார். சமி வீசிய அதே ஓவரின் 5-வது பந்தில் ரன் அவுட்டானார்.

டக் அவுட்

டக் அவுட்

18வது ஓவர் தான் இந்த ஐபிஎல் தொடரில் முக்கிய அம்சம். 4வது பந்தில் இங்ராம், அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரிலும் இரு விக்கெட்டுகளை இழக்க, ஆட்டம் பஞ்சாப் வசம் சென்றது.

4 விக்கெட்டுகள்

4 விக்கெட்டுகள்

19வது ஓவரில் சமி வீசிய 3வது பந்தில் விஹாரி 2 ரன்களில் வெளியேறினார். 144 ரன்களுக்கு 4 விக்கெட்டையும் அடுத்த 4 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளையும் டெல்லி இழந்தது.

கர்ரன் சாதனை

கர்ரன் சாதனை

20வது ஓவரை சாம் கரண் வீசினார். தான் வீசிய இரு பந்துகளிலும் ரபாடாவையும், லாமிசாவைனையும் க்ளீன் போல்டு செய்தார் கர்ரன். அதாவது 18வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டும், 20வது ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் கர்ரன்.

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

டெல்லி அணி வெற்றியை பெற வேண்டிய ஒரு ஆட்டம்... கடைசி 20 நிமிடங்களில் ஒட்டுமொத்தமாக மாறிப் போனது. இந்த போட்டி யார் மறந்து போகிறார்களோ... இல்லையோ.... டெல்லிக்கு என்றும் மறக்கமுடியாத ஒரு போட்டி என்பதை அடித்துச் சொல்லலாம்.

Story first published: Tuesday, April 2, 2019, 12:02 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
Losing 7 wickets for 8 runs ... The Delhi team is still away from knowing how they collapsed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X