For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தூத்துக்குடியை தூக்கியடித்த மதுரை பேந்தர்ஸ்... மரண மாஸ் பேட்டிங்..! 9 விக். வித்தியாசத்தில் வெற்றி

திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் தூத்துக்குடி அணியை 9 விக். வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது மதுரை பேந்தர்ஸ்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 3வது ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தூத்துக்குடி அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற தூத்துக்குடி முதலில் பேட் செய்வதாக கூறி களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக, அக்ஷய் சீனிவாசனும், விக்டரும் வந்தனர். சீனிவாசன் தொடக்கம் முதலே அட்டகாசமாக ஆடினார். சிவா மட்டும் 28 ரன்கள் எடுத்தார். 34 ரன்களில் அரை சதம் எட்டினார் சீனிவாசன்.

சொற்ப ரன்களில் அவுட்

சொற்ப ரன்களில் அவுட்

விக்டர் ஒரு ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 170 ரன்களை எட்டும் என்று எதிர்பார்த்த தூத்துக்குடி திணறியது. ஒரு கட்டத்தில் 79 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்தது.

124 ரன்கள் எடுத்தது

124 ரன்கள் எடுத்தது

ஆனால், அதன் பிறகு மதுரை பேந்தர்சின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மள மளவென விக்கெட்டுகள் சரிந்தன. முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது தூத்துக்குடி.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

125 ரன்கள் என்பது எளிய இலக்கு என்பதால் நம்பிக்கையுடன் களம் இறங்கியது மதுரை பேந்தர்ஸ். தொடக்க வீரர்களாக, அருண் கார்த்திக்கும், சரத் ராஜூம் களம் கண்டனர். இருவரும் மிக அழகாக ஸ்கோர் செய்தனர்.

தூள் கிளப்பிய மதுரை

தூள் கிளப்பிய மதுரை

தூத்துக்குடி பவுலிங்கை இருவரும் புரட்டி எடுத்தனர். குறுகிய சமயத்தில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்பதால் பலமாக முயன்றனர் தூத்துக்குடி வீரர்கள். ஆனால், அவர்களின் முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்க வில்லை.

முதல் விக். 95 ரன்கள்

முதல் விக். 95 ரன்கள்

இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். முடிவில், 12.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து இலக்கை வெற்றிகரமாக எட்டியது மதுரை பேந்தர்ஸ். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அருண் கார்த்திக் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Story first published: Saturday, July 20, 2019, 23:03 [IST]
Other articles published on Jul 20, 2019
English summary
Madurai panthers won against Tuti patriots in tnpl series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X