For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்துல ரசிகர்கள் கொடுக்கற உற்சாக டானிக் கிடைக்கறது சந்தேகம்தான்... விராட் கோலி ஏக்கம்

மும்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளை காலி மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Recommended Video

Williams recalls Kohli’s ‘notebook celebration

இந்நிலையில், மைதானத்தில் ரசிகர்களுககிடையில் உற்சாக சூழலில் விளையாடும் வாய்ப்பு காலி மைதானங்களில் கிடைக்காது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளுக்கிடையில் நடைபெறும் ஆட்டத்தில் போட்டி அதிகாக இருக்கும் என்றும் அந்த போட்டி மனப்பான்மையை ஆதரிக்கும் ரசிகர்கள் மைதானத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் கோலி கூறியுள்ளார்.

வீரர்கள் தேர்வில் எம்எஸ் தோனி நடுநிலையானவர்... முன்னாள் பௌலர் ஆர்பி சிங் உறுதிவீரர்கள் தேர்வில் எம்எஸ் தோனி நடுநிலையானவர்... முன்னாள் பௌலர் ஆர்பி சிங் உறுதி

பிசிசிஐயின் திட்டம்

பிசிசிஐயின் திட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய போட்டித் தொடர்கள் முடங்கியுளளன. இதையடுத்து ஊரடங்கு முடிந்தவுடன் போட்டிகளை காலி மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களின் உற்சாகம் கிடைக்காது

ரசிகர்களின் உற்சாகம் கிடைக்காது

இந்நலையில் காலி மைதானங்களல் போட்டிகள் நடத்தப்பட்டால் ரசிகர்களின் உற்சாகத்திற்கிடையில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் கனெக்டட்' என்ற ஹோவிற்காக பேசிய விராட் கோலியின் வீடியோவை பிசிசிஐ தனுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில்தான் விராட் கோலி இந்த கருத்தை பகிர்ந்துள்ளார்.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

காலி மைதானங்களில் விளையாடும் அனைத்து வீரர்களும் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ள விராட் கோலி, இதுகுறித்து தான் ஏற்கனவே அதிகமாக யோசித்து விட்டதாகவும் ஆனால் மற்ற வீரர்கள் இந்த சூழலை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் பாதிக்கும்

ஆட்டம் பாதிக்கும்

வெளிநாடுகளில் விளையாடும்போது, அந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவு இல்லை என்றாலும், அதற்கேற்ப நாம் பழகிக் கொள்வோம் ஆனால் உள்ளுரில் நமது ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாக கரவொலியுடன் விளையாடும் நிலை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்று கோலி கூறியுள்ளார். அந்த சூழல் இல்லாத நிலையில் நம்முடைய விளையாட்டு பாதிக்கபபடுவதை தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 12, 2020, 15:33 [IST]
Other articles published on May 12, 2020
English summary
Playing in front of packed crowd can't be re-created -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X