For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: மகிளா ஜெயவர்த்தனே அறிவிப்பு

By Veera Kumar

கொழும்பு: இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் மகிளா ஜெயவர்த்தனே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

1997ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் கண்டவர் இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே. இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 493 ரன்கள் குவித்துள்ளார். இதில் 33 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும்.

Mahela Jayawardene to retire from Test cricket

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து அடுத்த மாதம் முதல், ஓய்வு பெற உள்ளதாக ஜெயவர்த்தனே இன்று அறிவித்துள்ளார். இம்மாதம் 16ம்தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரில் விளையாடும் மகிளா ஜெயவர்த்தனே, அதன்பிறகு ஆகஸ்ட் 6ம்தேதி பாகிஸ்தானுடனான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறார். அந்த தொடருடன் ஜெயவர்த்தனே ஓய்வு பெற உள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜெயவர்த்தனே, இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார்.

Story first published: Monday, July 14, 2014, 17:21 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
Former Sri Lanka captain Mahela Jayawardene today announced his retirement from Test cricket. Jayawardene will quit from the five-day format after the South Africa and Pakistan series next month. However, he will continue to play ODIs. In April this year, he bid adieu to T20 Internationals after winning the World T20 trophy in Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X