வந்தது புது பிரச்னை.. மைக் ஹசியால் சிஎஸ்கே-க்கு தலைவலி.. இருந்த ஒரு இடமும் போச்சு, இனி இந்தியாவே கதி

சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Michael Husseyஆல் CSKவுக்கு சிக்கல்! Maldives க்கு போக முடியாது | OneIndia Tamil

ஐபிஎல் அணிகளில் பபுள்களில் கொரோனா வைரஸ் நுழைந்ததால் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஐபிஎல் 2021.. இந்த ரெண்டு டீம்.. கண்டிப்பா 'கப்' ஜெயிக்க வாய்ப்பு - அட செம!

முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா அடுத்தடுத்து சிஎஸ்கே, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கும் பரவியிருக்கிறது.

சென்னை அணி

சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. இதனையடுத்து அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலத்தீவில் தஞ்சம்

மாலத்தீவில் தஞ்சம்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வரும் மே 15ம் தேதி வரை தடைவிதித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 37 பேர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மே 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பவுள்ளனர். மைக் ஹசி பூரண குணமடைந்த பிறகு மாலத்தீவு செல்வார் என திட்டமிடப்பட்டது.

அடைக்கப்பட்ட கதவுகள்

அடைக்கப்பட்ட கதவுகள்

இந்நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மைக் ஹசி குணமடைந்தால் அவரை மாலத்தீவுக்கு அனுப்புவதில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் ஹசிக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதில் நெகட்டீவ் என வந்தால் சென்னையிலேயே அவர் தங்க வேண்டியதுதான்.

அணியின் முடிவு

அணியின் முடிவு

இதுகுறித்து பேசிய சிஎஸ்கே செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசியால் சக வீரர்களுடன் மாலத்தீவில் இணைய முடியாதுதான். ஆனால் அவரின் பயணம் குறித்து தற்போதே எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனென்றால் ஹசியின் உடல் நிலை தான் தற்போது முக்கியம். அவருக்கு முதலில் கொரோனா நெகட்டீவ் என முடிவுகள் வரட்டும். அதன் பிறகு அவரை தாய் நாட்டிற்கு அனுப்புவது குறித்து திட்டமிடலாம்.

பரிசோதனை

பரிசோதனை

மைக் ஹசிக்கு நாளை கொரொனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் தான் முடிவு தெரியவரும். எனவே நாங்கள் பொறுமையாக இருந்து மைக் ஹசியின் உடல் நலத்திற்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அவரின் உடல்நிலை நன்கு தேறிவருகிறது எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Maldives bans travellers from India, CSK worried about Michael Hussey's return to Australia
Story first published: Thursday, May 13, 2021, 18:20 [IST]
Other articles published on May 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X