For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகத்துலயே யார்க்கர் பௌலிங் போடறதுல அவர்தான் பெஸ்ட்... யாருமே ஈடு இல்ல

டெல்லி : சர்வதேச அளவில் யார்க்கர் பௌலிங்கில் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் லசித் மலிங்கா சிறப்பாக செயல்பட்டதாக பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020 could be hosted outside the India

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பும்ரா, யார்க்கர் போடுவதில் சிறப்பானவராக கருதப்படுகிறார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மலிங்கா தனக்கு இதில் உதவியுள்ளதாக பும்ரா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் வீட்டில் முடங்கியுள்ள பும்ரா, வாரத்தில் 6 நாட்கள் தான் பயிற்சி மேற்கொள்வதாகவும், ஆயினும் தொடர்ந்து பௌலிங் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவ விட கோலிதான் அதுல பெஸ்ட்... பிராட் ஹாக் உறுதிரோகித் சர்மாவ விட கோலிதான் அதுல பெஸ்ட்... பிராட் ஹாக் உறுதி

தவிர்க்க முடியாத பௌலர்

தவிர்க்க முடியாத பௌலர்

இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ஜஸ்பிரீத் பும்ரா. ஐசிசி தரவரிசையிலும் முதலிடங்களில் இடம்பெற்றுள்ள பும்ரா, யார்க்கர் பௌலிங்கிலும் சிறந்து விளங்குகிறார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத பௌலராக உள்ளார் பும்ரா. இவரது பௌலிங்கை எதிர்கொள்ள சர்வதேச வீரர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலங்களில் உதவி

ஆரம்ப காலங்களில் உதவி

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வீரர் இலங்கையின் லசித் மலிங்கா உலகலேயே யார்க்கர் பௌலிங்கை போடுவதில் சிறப்பானவர் என்று பும்ரா தெரிவித்துள்ளார். அவர் யார்க்கர் போடுவதில் தனக்கு ஆரம்ப காலங்களில் மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் பும்ரா கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பதிவு

மும்பை இந்தியன்ஸ் பதிவு

லசித் மலிங்கா நீண்ட காலமாக யார்க்கர் பௌலிங்கில் சிறந்து விளங்குவதாகவும், அதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் பும்ரா மேலும் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் மலிங்கா குறித்த பும்ராவின் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பும்ரா மற்றும் மலிங்கா இணைந்துள்ள புகைப்படத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

போட்டிகள் துவங்கினால் என்ன நிலை?

போட்டிகள் துவங்கினால் என்ன நிலை?

இதனிடையே, அந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு பகிர்வில், வாரத்தில் 6 நாட்கள் தான் பயிற்சி மேற்கொள்வதாகவும் ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் தன்னால் பௌலிங் போட முடியவில்லை என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். மீண்டும் போட்டிகள் துவங்கும்போது என்ன நிலை ஏற்படும் என்றும் தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, June 5, 2020, 21:24 [IST]
Other articles published on Jun 5, 2020
English summary
Malinga used Yorker for such a long period of time -Bumrah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X