For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்திற்குள் காரில் சீறிய 'குடிமகன்'.. கம்பீர், இஷாந்த் மீது மோதியிருந்தால் என்ன ஆயிருக்கும்?

டெல்லியில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் மைதானத்திற்குள் காரை ஒட்டிக்கொண்டு ஒரு நபர் உள்ளே நுழைந்து இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: டெல்லியில் நேற்று நடத்த ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணியும் உத்தரபிரதேச அணியும் மோதின. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது அங்கு திடீர் என்று வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

அப்போது அந்த மைதானத்திற்கு திடீர் என்று ஒரு நபர் காரை வேகமாக ஒட்டிக் கொண்டு வந்து இருக்கிறார். மேலும் காரை நடு மைதானத்தில் நிறுத்திவிட்டு குழம்பிப் போய் நின்று இருக்கிறார்.

அதேபோல் அங்கு இருந்த கிரிக்கெட் வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்று இருக்கிறார். இதன் காரணமாக அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு செய்யப்பட்டு வருகிறார். அவர் விசாரணையில் மிகவும் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறியிருக்கிறார்.

 டெல்லியில் நடந்த ரஞ்சி போட்டி

டெல்லியில் நடந்த ரஞ்சி போட்டி

கடந்த சில நாட்களாக பிசிசிஐயால் ரஞ்சி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று டெல்லி அணியும், உத்தரபிரதேச அணியும் மோதின. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக போனது. தற்போது அங்கு நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிகவும் விறுவிறுப்பாக ஆடி வருகிறது டெல்லி அணி. ஆனால் இந்த போட்டி இந்த விறுவிறுப்பான ஆட்டத்திற்கு பதிலாக வேறொரு விஷயத்திற்காக தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

 மைதானத்திற்குள் வந்த கார்

மைதானத்திற்குள் வந்த கார்

இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இஷாந்த் சர்மா பந்து வீசிக் கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நபர் தனது காரை ஒட்டிக் கொண்டு மைதானத்திற்குள் வந்து இருக்கிறார். சரியாக அவர் பந்து போடும் சமயத்தில் காரை கொண்டு வந்து உள்ளே நிறுத்தி இருக்கிறார். பிட்ச்சில் சில நிமிடம் காரை வைத்து இருந்த அந்த நபர் அதன் பின் இரண்டு முறை மைதானத்தை சுற்றி வந்து இருக்கிறார்.

 எப்படி உள்ளே வந்தார்

எப்படி உள்ளே வந்தார்

இந்த நிலையில் காருடன் உள்ளே வந்த அந்த நபர் அங்கு கிரிக்கெட் நடப்பது தெரியாமல் இஷாந்த் சர்மாவை யாரோ என்று நினைத்துக் கொண்டு பேசி இருக்கிறார். அப்போது கவுதம் கம்பீர் உள்ளிட்ட பிற வீரர்களும் அருகே நின்றனர். அவர் மைதானத்திற்குள் கார் வருவதற்காக இருக்கும் கேட் வழியாக உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த கேட் கதவு தவறுதலாக திறந்தே வைக்கப்பட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது. அந்த மைதானத்தை சமயங்களில் பார்க்கிங்காக பயன்படுத்த அப்படி வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

கைது செய்து விசாரணை

இந்த நிலையில் அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு அங்கு கிரிக்கெட் நடப்பதே தெரியாது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் அப்போது மது போதையில் வண்டி ஒட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. போதையில் வீரர்கள் மீது காரை விட்டு ஏற்றியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மைதானத்தின் பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 4, 2017, 18:25 [IST]
Other articles published on Nov 4, 2017
English summary
Ranji trophy match between Delhi and uttar Pradesh is going on in Delhi. A man in Delhi drove his car onto the pitch during that cricket match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X