For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

28 வருஷத்துக்கு முன்னாடியே இதை நம்ம "சச்சின் தாத்தா" செஞ்சுட்டாருப்பா...!

சென்னை: சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்றைய நாள் ரொம்ப வித்தியாசமாக அமைந்து போனது. தென் ஆப்பிரிக்க அணியில் வீரர்கள் அடுத்தடுத்து சுகவீனமடைந்து வெளியேற பீல்டிங் செய்ய ஆள் இல்லாமல் கடைசியில் அந்த அணியின் வீடியோ அனாலிஸ்ட் வந்து பீல்டிங் செய்தார். அப்படியும் ஆள் பற்றாக்குறை ஏற்படவே இந்திய வீரர் ஒருவரை இரவல் வாங்கும் நிலைக்கு தென் ஆப்பிரிக்க அணி தள்ளப்பட்ட வினோதம் நடந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட காட்சிகள் மிக மிக அரிது. டூர் வந்த இடத்தில் இப்படி தென் ஆப்பிரிக்க வீரர்களின் வயிறு ரிப்பேர் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்திய ஏ அணிக்கு எதிராக நேற்று தென் ஆப்பிரிக்க ஏ அணி மோதியபோதுதான் பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறின.

சுகவீனத்தால் வந்த பீல்டிங் பஞ்சாயத்து

சுகவீனத்தால் வந்த பீல்டிங் பஞ்சாயத்து

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தபோது இந்திய அணி 245 என்ற வெற்றி இலக்கைத் துரத்திக் கொண்டிருந்தது. தென் ஆப்பிபரிக்க ஏ அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போதுதான் அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் சுகவீனமடைந்தனர்.

பேட்டிங் செய்த அகர்வால் - உன்முக்த் சந்த்

பேட்டிங் செய்த அகர்வால் - உன்முக்த் சந்த்

மயங்க் அகர்வாலும், உன்முக்த் சந்த்தும் பேட் செய்து கொண்டிருந்தனர். அப்போது குவின்டன் டி காக் சுகவீனமடைந்து வெளியேறினார்ம. இதனால் பீல்டிங் செய்ய ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.

களத்தில் குதித்த மந்தீப் சிங்

களத்தில் குதித்த மந்தீப் சிங்

இதையடுத்து இந்திய ஏ அணி வீரர் மந்தீப் சிங் தென் ஆப்பிரிக்காவுக்காக பீல்டிங் செய்ய களம் இறங்க வந்தார். தென் ஆப்பிரிக்க அணியின் சீருடையில் அவர் களம் குதித்தார்.

புன்னகை தவழ

புன்னகை தவழ

வித்தியாசமான சூழலில் பீல்டிங் செய்ய வந்ததால் சிரித்த முகத்துடன் தென் ஆப்பிரிக்காகவுக்காக பீல்டிங் செய்தார் மந்தீப் சிங். ஆனால் அவர் யாரையும் கேட்ச் செய்யவில்லை, அவுட்டாக்கவும் இல்லை, அந்த வாய்ப்பும் அவருக்கு வரவில்லை.

சச்சின் அப்பவே செய்துட்டார் பாஸ்

சச்சின் அப்பவே செய்துட்டார் பாஸ்

இதுபோல எதிரி அணிக்காக சொந்த அணிக்கு எதிராக பீல்டிங் செய்த சம்பவம் இந்தியர்களுக்குப் புதிதில்லை. 28 வருடத்திற்கு முன்பு சச்சின் இதைச் செய்துள்ளார்.

அப்ப வயசு 14

அப்ப வயசு 14

அப்போது மும்பை கிரிக்கெட் கிளப்பில் இந்தியா, பாகிஸ்தான் காட்சிப் போட்டி ஒன்று நடந்தது. அதில் பாகிஸ்தான் தரப்பில் பீல்டிங்குக்கு ஆள் இல்லாததால் அப்போது 14 வயதாக இருந்த சச்சினைக் கூப்பிட்டு பீல்டராக்கினர். சுமார் 25 நிமிடம் அவரும் பீல்டிங் செய்தார். அப்போட்டியில் அஸாருதீன் 80 ரன்களை விளாசினார். இந்திய அணி வெற்றி பெற்றது.

அடுத்த 2 வருடத்தில் இந்திய அணியில்

அடுத்த 2 வருடத்தில் இந்திய அணியில்

அப்போது சச்சினை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால் அடுத்த 2 வருடத்தில் அவர் இந்திய அணியில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பல சாதனைகளையும் படைத்தார் என்பது வரலாறாகும்.

Story first published: Monday, August 10, 2015, 14:00 [IST]
Other articles published on Aug 10, 2015
English summary
An Indian player fielded for South Africa A team when the visitors were short of fielders in Chennai matfch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X