For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனையே தூக்கிய SRH.. மும்பை பிளே ஆஃப் செல்வதைத் தடுக்க வியூகம்.. எதற்காக இந்த ட்விஸ்ட்?

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.8) இரண்டு டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தையும், ஆர்சிபி அணி டெல்லியையும் எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டியில் மும்பை அணி வென்றாலும், பிளே ஆஃப் முன்னேறுவது கடினமே. எனினும், சில கணித விகிதங்களின் அடிப்படையில் மும்பைக்கு ஒரேயொரு சதவிகிதம் மட்டும் வாய்ப்புள்ளது.

கடைசி நேரத்தில் வந்த ஸ்பெஷலிஸ்ட் வீரர்.. டாஸ் வென்ற மும்பை அணி.. ரோகித் கொடுத்த சூப்பர் டிவிஸ்ட் கடைசி நேரத்தில் வந்த ஸ்பெஷலிஸ்ட் வீரர்.. டாஸ் வென்ற மும்பை அணி.. ரோகித் கொடுத்த சூப்பர் டிவிஸ்ட்

 பெங்களூரு vs டெல்லி

பெங்களூரு vs டெல்லி

ஐபிஎல் 2021 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. இன்றோடு அனைத்து லீக் ஆட்டங்களும் நிறைவடைகின்றது. இன்று நடைபெறும் 2 ஆட்டமும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோதுகின்றன. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றில் நுழைய 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. நேற்றைய போட்டி முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. போட்டியில் மீதமிருப்பது கொல்கத்தாவும், மும்பையும் தான்.

 அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது எனலாம்.14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது. ஏற்கனவே ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருந்த கொல்கத்தா அணி ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தது. இதனால் அந்த அணி மிகவும் சிறப்பான நிலையை அடைந்தது. எனவே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றில் நுழைய மிக மிக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

 குறைந்த ரன்னில் சுருட்டணும்

குறைந்த ரன்னில் சுருட்டணும்

நடப்பு சாம்பியனான மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை. 12 புள்ளியுடன் 6 வது இடத்தில் உள்ள அந்த அணி ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதாவது முதலில் பேட் செய்து மும்பை 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதே நேரத்தில் பந்துவீச்சில் ஐதராபாத்தை 80 ரன்களில் சுருட்ட வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால் நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஏதாவது அதிசயம், அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை வாய்ப்பை பெற முடியும்.

 மாற்றம் ஏன்?

மாற்றம் ஏன்?

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அணியில் ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், சன் ரைசர்ஸ் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு, வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த மனீஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதில் தான் கேப்டனாக செயல்படுவது என்று கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ் குமாரும் காயத்தில் சிக்கியிருப்பதால், முகமது நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, October 8, 2021, 21:41 [IST]
Other articles published on Oct 8, 2021
English summary
Manish pandey as srh captain against ipl - மும்பை இந்தியன்ஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X